Lankan Prez dials PM, says reports about him claiming RAW planning his assassination baseless | கொலை முயற்சி புகார்: மோடியிடம் சிறிசேனா விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொலை முயற்சி புகார்: மோடியிடம் சிறிசேனா விளக்கம்

Added : அக் 18, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
PMModi, Sirisena, RAW, இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடி, உளவுத்துறை, ரா, பிரதமர் மோடி, assassination,  Sri Lankan President Maithripala Sirisena, modi,Prime Minister Modi,

புதுடில்லி: இந்தியாவின் உளவு அமைப்பான ரா தன்னை கொல்ல முயன்றதாக வெளியான தகவல் முற்றிலும் தவறு என பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.


மறுப்பு

இலங்கை அதிபர் சிறிசேனா, தன்னை கொல்ல, இந்தியாவின் உளவு அமைப்பான,'ரா' சதி செய்ததாக, அமைச்சரவை கூட்டத்தின் போது கூறியதாக, செய்திகள் வெளியாகின. ஆனால்,இந்த செய்திகளை, இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'அமைச்சரவை கூட்டத்தில், அதிபர் பேசியது தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது' என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


விளக்கம்

இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் சிறிசேனா,பிரதமர் மோடியிடம், மீடியாவில் வெளியான விஷமத்தனமான மற்றும் பொய் செய்தி தவறானது. ஆதாரமற்றது. இரு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தவே இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இலங்கையின் உண்மையான நண்பராக பிரதமர் மோடி உள்ளார். இரு நாட்டு உறவை பலப்படுத்த பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவேன் என சிறிசேனா கூறினார்.


பாராட்டு

அப்போது அவரிடம் பிரதமர் மோடி, தவறான செய்தி குறித்து அதிபரும், இலங்கை அரசும் விளக்கம் அளித்தது பாராட்டுக்கு உரியது. அண்டை நாடுகள் குறித்த இந்தியாவின் கொள்கை, அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது என்ற இந்தியாவின் கொள்கையில் உறுதியாக உள்ளதாக கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
19-அக்-201801:17:06 IST Report Abuse
sumutha - chennai அது வேற ஒன்னும் மில்லிங்க நேத்து ராவு தூங்கரதுக்கு முன்னாடி ரா ரா சர்ச்சுக்கு ரா ரா அப்படிங்கற பாட்ட கேட்டு தூங்க போனேனா தூக்கத்திலேயே ரா ரா னு பாடிகிட்டே இருந்திட்டேன் போலரிக்கு அதான் இப்படி ஒரு நியூசு தப்பா நெனிசிகிடாதீங்க பிளீஸ்
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
18-அக்-201820:41:14 IST Report Abuse
Siva இதே ராகுல் இருந்திருந்தால்..... ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.... ஶ்ரீசேனா விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறீர்களா....
Rate this:
Share this comment
Cancel
18-அக்-201818:53:51 IST Report Abuse
ஆப்பு சிரிசேனாவுக்கு கற்பனை ஜாஸ்தி...உள்ளூர் திருடன்களையே புடிக்க முடியலை...இது ரா வந்து ஏதோ செய்யப் போகுதாம். தொப்பை வளர்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X