வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்ய வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்ய வாய்ப்பு

Added : அக் 18, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சென்னை வானிலை, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி, பருவமழை,சென்னை வானிலை மையம் , கனமழை, 
Chennai Weather, South-West Monsoon, Northeast Monsoon, Tamil Nadu, Puducherry, Monsoon, Chennai Weather Center, Heavy Rain,

சென்னை: வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது: தென்மேற்கு பருவமழை வரும் 20ம் தேதியுடன் நாடு முழுவதும் முடிவு பெறுகிறது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஒரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் 7 செ.மீ., உளுந்தூர்ப்பேட்டையில் 6 செ.மீ., கடலாடியில் 5 செ.மீ., ஆம்பூர், வேலூர், பெரியகுளத்தில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகம் பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
18-அக்-201818:56:59 IST Report Abuse
Rpalnivelu நூறாயிரம் தண்ணீர் குழாய்கள் வானத்திலிருந்து திறந்தாலும் நாங்கள் (தமிழக அரசு / அமைச்சர்கள் / அதிகாரிகள்) என்ன கவலையா பட போறோம்?
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
18-அக்-201815:56:14 IST Report Abuse
J.Isaac எவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவு நீரும் கடலுக்குத்தான் போய் சேரும் . மணல் கொள்ளை போல் இனிமேல் தண்ணீர் கொள்ளை. கோயம்பத்தூரில் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுத்தது போல் சென்னையிலும் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-201814:22:31 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி மழை எவ்வளவு பெய்தாலும் அதனால் விவசாயிகளுக்கு நன்மையேதும் இல்லை. பொதுமக்களும் நிலத்தடிநீரை சேமிக்க மாட்டார்கள். அரசும் மழை வெள்ளத்தை சேமிக்கப் போவதில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X