144! இரண்டாம் நாளாக சபரிமலையில் கொந்தளிப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
144,இரண்டாம் நாள், சபரிமலை,கொந்தளிப்பு

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம், மேலும் தீவிரமடைந்துள்ளது. இரண்டாவது நாளாக நேற்றும், கொந்தளிப்பான சூழல் நிலவியதால், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில்,144 தடை உத்தரவு நீட்டிக்கப் பட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இங்குள்ள கடவுள் அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் இருப்பதால், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், 'சபரிமலைக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில், மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், இந்த தீர்ப்பை கண்டித்து, கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாதாந்திர பூஜைகளுக்காக, நேற்று முன்தினம் மாலை, சபரிமலையில், கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலைக்கு வரும் வழித்தடமான, நிலக்கல்லில் போராட்டம் வெடித்தது.
அங்கு ஏராளமான பக்தர்கள் முகாமிட்டு, பெண்கள் வருகின்றனரா என கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன் தினம், சபரிமலைக்கு வந்த ஆந்திர பெண்ணை, போராட்ட குழுவினர் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். போராட்டக்காரர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால், நிலக்கல் பகுதி போர்க்களமானது; ஏராளமான பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

தாக்குதல்


போலீஸ் கெடுபிடி இருந்தாலும், நேற்றும் நிலைமை சீராகவில்லை. போராட்டக்காரர்கள் வனப் பகுதிகளுக்குள் பதுங்கி உள்ளனர்.இந்நிலையில், அமெரிக்க பத்திரிகையான, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் தெற்காசிய பகுதி பெண் நிருபர், சுஹாசினி ராஜ், 46, வெளிநாட்டு நண்பர் ஒருவருடன், நேற்று காலை சபரிமலைக்கு வந்தார்.
இவர், 2005ல், 'கோப்ரா போஸ்ட்' என்ற இணைய பத்திரிகையில் பணியாற்றியபோது, பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற, எம்.பி.,க்களை தோலுரித்து காட்டிய, 'ஸ்டிங் ஆபரேஷனில்' அங்கம் வகித்தவர்.நேற்று சபரிமலைக்கு வந்த அவர், பம்பையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். நீலிமலை, அப்பாச்சிமேடு மலைகளை தாண்டி, சபரி பீடம் வந்தபோது, போராட்டக்காரர்கள், அவரை சுற்றி வளைத்து சரண கோஷமிட்டனர்.
கல், தேங்காய்கள் வீசப்பட்டதால், அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது; அவர் திரும்பிச் செல்வதாக கூறினார். கோவிலுக்கு செல்லும்படி போலீசார்அறிவுறுத்தியும், அவர் பம்பை திரும்பினார். போலீசார், அவரிடம் வாக்குமூலம் பெற்று,

வேனில், திருவனந்தபுரம்
அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, போலீசார் பிறப்பித்துள்ள, 144 தடை உத்தரவு, இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலையை சுற்றி, 30 கி.மீ.,க்கு இந்த தடை இருக்கும்.இதன்படி, பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள, பம்பை, சபரிமலை சன்னிதானம், நிலக்கல், இழவங்கல் பகுதிகளில், போராட்டக்காரர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு எந்த தடையும் இல்லை.
பம்பை முதல், சன்னி தானம் வரை உள்ள வனப் பகுதிகளுக்குள், போராட்டக்காரர்களை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். நிலக்கல்லில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை
திறக்கப்பட்டுள்ளது. பம்பை வரும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்படுகின்றன. அதில் போராட்டக்காரர்கள் இருந்தால், திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கேரளா முழுவதும், நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால், சபரிமலை வரும்வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், கடும் அவதிக்கு ஆளாகினர்.
சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்,கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. போராட்டக்காரர்களை

கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். இதற்கிடையே, சபரிமலை கோவிலின் புதிய மேல்சாந்தியாக, வி.என்.வாசுதேவன் நம்பூதிரி, நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

சமரசத்துக்கு தயார்


திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், பத்மகுமார் கூறியதாவது:சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர், போராட்டத்தை கைவிட்டால், அவர்களுடன் சமரச பேச்சு நடத்தவும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆசாரங்களை மீறி, பெண்கள் படியேறி வந்தால், அதற்காக சபரிமலை நடையை அடைக்க முடியாது; அது ஆகம விதிகளை மீறும் செயல். நடை அடைக்கப் படும் என பரப்பப்படும் பிரசாரங்கள் ஆதாரமற்றவை. பெண்கள் வந்தால், சுத்திகலச பூஜை நடத்த முடியாது. ஒவ்வொரு முறையும் பெண்கள் வரும் போதும் சுத்திகலசம் நடத்துவது சாத்தியமற்றது. ஆசாரங்களை பின்பற்றித் தான் பெண்கள் வருவர்என நம்புகிறேன்.
-கண்டரரு ராஜீவரரு, சபரிமலை தந்திரி

சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது. ஜாதி, மத சிந்தனைகளுக்கு அப்பாற் பட்டது, சபரிமலை. இங்கு குற்றவாளிகளை குவித்து, பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். கோவில் விசுவாசிகள் என கூறி கொள்பவர்கள், பக்தர்களை தாக்குகின்றனர். எல்லா தரப்பு மக்களுக்கும் சொந்த மான சபரிமலையை, ஜாதி வெறியின் மையமாக மாற்ற முயற்சிக்கின்றனர்; இதை அனுமதிக்க முடியாது.
-பினராயி விஜயன்கேரள முதல்வர், மார்க்., கம்யூ.,


Advertisement

வாசகர் கருத்து (16+ 150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிற்பி - Ahmadabad,இந்தியா
19-அக்-201820:48:15 IST Report Abuse

சிற்பி மாநில அரசுகளே, கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது என்று ஒரு தீர்ப்பை உச்சநீதி மன்றம் அறிவித்தது. அதை செய்து முடித்து விட்டீர்களா ? திராணி இருந்தால் எங்கே செய்து காட்டுங்கள் பார்க்கலாம் ?

Rate this:
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
19-அக்-201815:30:23 IST Report Abuse

வேலங்குடியான்வினை விதைத்தவன் வினை அறுப்பான்... உச்சநீதி மன்றத்துல வழக்கு தொடர்ந்தவன வெளுத்தா எல்லாம் சரியாகிடும்.....

Rate this:
KSK - Coimbatore,இந்தியா
19-அக்-201811:29:57 IST Report Abuse

KSKஇந்த பெண்ணை பார்த்தாலே தெரிகிறது இவர் எவ்வளவு பக்தி மேலிட்டு தவமாய் தவமிருந்து சிரத்தையாக சபரிமலைக்கு விரதம் இருந்து நடந்தே மலை ஏறி வந்து ஐயப்பன் தரிசனம் பெற வந்தவர் என்பது முகத்தில் என்ன ஒரு தேஜஸ், அப்பப்பப்பா என்ன, நம் காதில் ஒரு பூ செண்டு வைத்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான் ....

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X