China to launch 'artificial moon' to replace streetlamps | செயற்கை நிலா: சீனா திட்டம்| Dinamalar

செயற்கை நிலா: சீனா திட்டம்

Updated : அக் 19, 2018 | Added : அக் 19, 2018 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சீனா, செயற்கை நிலா, தெருவிளக்கு, China, artificial moon, streetlamps

பெய்ஜிங்: மின்சிக்கனம் மற்றும் தெரு விளக்குகளுக்கு மாற்றாக 2020ம் ஆண்டிற்குள் செயற்கை நிலா திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஒளிரும் செயற்கை கோளை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது.

இந்த திட்டத்திற்காக சிச்சுவான் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள செங்டு நகரில், மின்னும் செயற்கை கோளை தயாரித்து வருகின்றனர். நிலா போல் ஒளிரும் இந்த செயற்கைகோள், நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும். 50 சதுர கிலோ மீட்டர் தூரம் வெளிச்சம் கிடைக்கும். இந்த செயற்கை கோள், 2020 ம் ஆண்டில், சிச்சுவானில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் 2022ற்கும் மேலும் 3 செயற்கைகோள்களை ஏவவும் திட்டமிட்டு உள்ளது. வணிக ரீதியிலும், இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. இத்திட்டத்தினால் ஏராளமான மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என சீனா நினைக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
20-அக்-201808:37:01 IST Report Abuse
Chanemougam Ramachandirane உலகத்தில் சீன எல்லா திட்டங்களையும் முயற்சியும் செய்து செயல் படுத்துகிறது தங்கள் அறிவாற்றலை வெளி படுத்துகிறது இந்தியாவில் இவ்வாறாக யார் அறிவாற்றலை வெளிப்படுத்தினாலும் அதற்கு குறியீடு கொடுக்க வேல்இப்படுத்த தடையாக உள்ளார்கள் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மின் தேவையை 5 Hp 12 Hp யாக ஆய்வு செய்து அதை பதிவு செய்ய நீதிமன்றத்திற்கு வரை சென்றுள்ளார் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றைக்கு இந்தியாவில் எந்த பொருளையும் கண்டு பிடித்தால் அங்கீகாரம் கொடுப்பார்களோ அன்று தான் நாடு முன்னேறும் அதற்கு தடையாக இருக்க கூடாது அதற்கு என்று தனி நிர்வாகம் எல்லா மாநிலத்திலும் செயல் பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-அக்-201808:17:05 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்ல திட்டம் நாமும் செயல்படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-அக்-201807:59:42 IST Report Abuse
S.Baliah Seer சீனர்கள் எப்போதுமே மூடர்கள். இயற்கையை செயற்கை ஆக்கும் எண்ணம் கொடியது. தாய்ப்பாலில் அப்பம் சுட்டவர்கள் தானே இவர்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X