ரயில் மோதியதில் பலரை காணவில்லை; உள்ளூர் மக்கள் ஆவேச போராட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ரயில் மோதியதில் பலரை காணவில்லை
உள்ளூர் மக்கள் ஆவேச போராட்டம்

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில், தசரா விழாவின் போது, ரயில் மோதியதில் பலர் காணாமல் போனதாகவும், அவர்களை தேடும் பணியை துவக்க வேண்டும் என்றும், உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில், மோதல், பலரை ,காணவில்லை


பஞ்சாப் மாநிலத்தில், உள்ள ஜோதா பதக் பகுதியில், தசரா விழாவின்போது, ராவணன் உருவபொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.அப்போது, அந்த வழியாக வேகமாக சென்ற ரயில், தண்டவாளத்தில் நின்றவர்களை மோதிச் சென்றது. இந்த கோர விபத்தில், 59 பேர் உயிர் இழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.

முறையான தகவல்


இந்நிலையில், 'இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பலரை இன்னும் காணவில்லை; அவர் களைத் தேடும் பணியில் ஈடுபட வேண்டும்' என, அப் பகுதியைச் சேர்ந்த மக்கள், திடீர் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.'

உள்ளூரைச் சேர்ந்த பலரை காணவில்லை. அவர்களது உறவினர்கள், மருத்துவ மனைகளில் தேடி வருகின்றனர். முறையான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. பலி எண்ணிக் கையை குறைத்து காட்டுவதற்கான முயற்சியில், அரசும், மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது' என, போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அவர்களை கலைந்து போகும்படி, போலீசார் கூறினர். போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இதையடுத்த, போலீசார் தடியடி நடத்தி, போராட்டகாரர்களை கலைந்து போகச் செய்தனர்.

விபத்து நடந்த இடத்தில், ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், இரண்டு நாட்களாக, அந்த வழித்தடத்தில்ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்தது.போராட்டக்கார்கள், நேற்று அகற்றப் பட்டதை அடுத்து, இரண்டு நாட்களுக்கு பின், அந்த வழித்தடத்தில், நேற்று மதியம், மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.


Advertisement

பரபரப்பு 'வீடியோ'


தசரா நிகழ்ச்சியில், பஞ்சாப் மாநில கலாசாரதுறை அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, காங்கிரசைச் சேர்ந்த, நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவ்ஜோத் கவுர் சித்து பங்கேற்றார்.

விழா துவங்கியபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், 'உங்களை பார்ப்பதற்காக மக்கள் குவிந்துள்ளனர். நுாற்றுக்கணக்கான ரயில்கள் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை' என, மைக்கில் கூறிய, 'வீடியோ' தற்போது வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தசரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த, சவுரவ் மதன் மித்து என்பவர் தப்பியோடி விட்டார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (6+ 168)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pure stream - Nagarcoil,இந்தியா
22-அக்-201816:12:14 IST Report Abuse

Pure streamஇங்கே அதிக அளவில் முல்லாக்களை காணலாம்.

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
22-அக்-201810:14:53 IST Report Abuse

Mohamed Ilyasடிரைவர் பெயர் என்ன ராவணனா கொஞ்சம் விசாரிங்கப்பா

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-அக்-201808:52:22 IST Report Abuse

Srinivasan Kannaiyaஒரு இரு மாதம் கழித்து எல்லாம் தெரியும்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X