தேர்தல் பிரசாரத்தில், 'மேஜிக்'; மத்திய பிரதேச பா.ஜ., அதிரடி Dinamalar
பதிவு செய்த நாள் :
தேர்தல் பிரசாரத்தில், 'மேஜிக்': ம.பி.,பா.ஜ., அதிரடி

போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துக்கு, 'மேஜிக்'நிபுணர்களை பயன்படுத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

 தேர்தல் பிரசாரம்,மேஜிக்,ம.பி., பா.ஜ., அதிரடி


ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத் தில், ஏற்கனவே மூன்று முறை தொடர்ந்து ஆட்சியில் உள்ள, பா.ஜ., வரும், நவ., 28ல், நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் வென்று, நான்காம் முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், ம.பி., மாநில, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரஜ்னீஷ் அகர்வால், போபாலில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

திட்டம்


சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு, மேஜிக் எனப் படும் மாயாஜாலம் செய்யும் கலைஞர்களை பயன் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த, 15 ஆண்டு கால, பா.ஜ., ஆட்சியில் அடைந்த சாதனை களை, முந்தைய, காங்., ஆட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில்,மேஜிக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், பிரசாரமாக செய்யப்படும்.

மக்கள் அதிகம் கூடும், சந்தை உள்ளிட்ட இடங்களில், மேஜிக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை, பா.ஜ., நடத்தும். கிராமங்களிலும், பகுதியளவு நகர மயமான பகுதிகளிலும், இந்த நிகழ்ச்சிகளை

Advertisement

நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய, காங்., ஆட்சியின்போது, ம.பி.,யில், சாலைகளின் நிலை மிக மோசமாக இருந்தது; மின் சப்ளை யில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டது. அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. கடந்த, 15 ஆண்டு, பா.ஜ., ஆட்சியில் இந்த நிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (11+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-அக்-201820:18:12 IST Report Abuse

Pugazh Vகா.மணி.பா. மிகச்சரியான சிறப்பான கருத்து. நிஜமாகவே பாராட்டுக்கள்.

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
22-அக்-201812:42:53 IST Report Abuse

சிற்பி குத்தாட்டம், மானாட மயிலாட என்று கலக்குங்க. அது தான் தமிழகத்தில் ஸ்டைல்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-அக்-201812:10:16 IST Report Abuse

Nallavan Nallavanமூன்று முறை தொடர்ந்து அங்கே பாஜக ஆட்சியைப் பிடித்தாலும் செய்த சாதனைகள் (அப்படி ஏதாவது உண்டா?) குறித்துப் பிரச்சாரம் செய்யாமல் மேஜிக்குகளை நம்புகிறது ...... மற்றொரு காங்கிரசாகவே மாறி வருகிறது .....

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X