கங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி

Added : அக் 22, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கங்கை,நதி,துாய்மையாகும்,நிதின் கட்கரி

புதுடில்லி : ''துய்மை கங்கா திட்டத்தில், 227பணிகளை, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின், கங்கை துாய்மையாகி விடும்,'' என, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி தெரிவித்தார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்தில், அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி, கங்கை துாய்மை, நீர்வளம் ஆகிய துறைகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம் கட்கரி கூறியதாவது: கங்கை நதியை துாய்மையாக்க சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். இதற்காக, 22 ஆயிரத்து, 374 கோடி ரூபாயில், 227 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கங்கையில் கழிவு நீர் கலப்பதை தடுப்பது, கரைகளை பலப்படுத்துதல், நதி நீர் தடைபடாமல் செல்வதுடன் துாய்மையாக இருப்பது உட்பட, பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணிகள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடிந்து விடும். அதன்பின், கங்கை, துாய்மையாக காட்சியளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
22-அக்-201817:56:22 IST Report Abuse
J.Isaac கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன் ஒரு திட்டம் அறிவித்தார் : மரங்களை , இயற்கை வளங்களை, விவசாய நிலங்களை அழித்து நாட்டில் பசுமையை உண்டாக்க மதுபான கடைகளையும் பீடா கடைகளையும் நிறுவி ஒன் இந்தியா கொள்கையை நிறைவேற்ற 10 லட்சம் கோடி செலவில் 84 ஆயிரம் கி.மீ பசுமை சாலைகள் போடப்படும் என அறிவித்தார். செய்தி தாளில் வரவேண்டும் என்று ஏதாவது பேசி கொண்டே இருப்பார்
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
22-அக்-201816:14:25 IST Report Abuse
Ray போன தேர்தலுக்கு முன்னால் சொன்னதை யாரோ அவருக்கு நினைவு படுத்தியிருக்கிறார்கள் அந்த சாத்வி அம்மா மந்திரி பதவியை ரிசைன் பண்ணிட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
Balasubramaniam - Tirupur,இந்தியா
22-அக்-201814:33:52 IST Report Abuse
Balasubramaniam முதலில் உங்கள் கட்சியை சுத்தம் செய்யவும். // உ. பி. பா.ஜ.க. தலைவர் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது//
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X