chennai | 96 வயது நேதாஜி படையின் வீரர் லால்திராம்.| Dinamalar

96 வயது நேதாஜி படையின் வீரர் லால்திராம்.

Updated : அக் 24, 2018 | Added : அக் 24, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


மறைந்த சுதந்திர போராட்ட தலைவர், சுபாஷ் சந்திர போஸ், 'ஆசாத் இந்தியா' எனப்படும், சுதந்திர இந்திய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரகடனப்படுத்திய, 75ம் ஆண்டு தினத்தை நினைவு படுத்தும் வகையில், டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய 96வயது தியாகி லால்திராம் என்பவர் தான் பணியாற்றிய போது உடுத்தியிருந்த அதே மிடுக்கான ராணுவஉடையுடனும்,நடையுடனும் கலந்து கொண்டு பிரதமர் மோடி உள்ளீட்டோரை மகிழவும் நெகிழவும் செய்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களில் வெகு சிலரே இப்போது உயிருடன் உள்ளனர் அவர்களி்ல் லால்திராமும் ஒருவர்.

அவர் கூறுகையில் அடக்குமுறைத் தன்மையோடு இந்தியா இரண்டாம் உலகப் போரில் இறக்கிவிடப்பட்டதற்கு சுபாஷ் சந்திர போஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.


சுதந்திர அரசாங்கமாகவுள்ள ஆஸாத் ஹிந்த் அரசாங்கம் என்று பிரபலமான இயக்கத்தை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார். நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னையே கொடுக்க தயங்காத தேசபக்தர்களைக் கொண்ட ராணுவத்தையும் உருவாக்கினார்.

மோசமான ஆயுதங்கள், போதிய பயிற்சியின்மை காரணமாகவும் இந்திய தேசிய ராணுவம் போரில் தோற்றுப்போனது ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம்தான் பின் சூறாவளியாக மாறி இந்தியாவிற்குள் சுதந்திரப்புயலை ஏற்படுத்தி சுதந்திரம் பெறவைத்தது.

நேதாஜிக்காக உயிரையும் தரத்தயராகயிருந்த படையில் நானும் இருந்தேன் என்பதே என் வாழ்நாள் பெருமை அப்போது முதல் அவரது பெயரை புகழை பரப்புவதையே லட்சியமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறேன் என்றவர் ஐஎன்ஏ வீரர்கள் அணிந்த ராணுவ தொப்பி ஒன்றை பிரதமர் மோடிக்கு அணிவி்த்து மகிழ்ந்தார் பிரதமரோ நெகிழ்ந்தார்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X