chennai | கொடுப்பது சுகமே...| Dinamalar

கொடுப்பது சுகமே...

Updated : அக் 26, 2018 | Added : அக் 26, 2018
Advertisement

படம் எடுப்பதன் மூலம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் தங்களால் முயன்ற பணத்தை போட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு தீபாவளி துணிமணி வாங்கி்க்கொடுத்தும் சந்தோஷப்படுத்தினர்.சென்னையில் உள்ள தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அமைப்பானது வருடந்தோறும் ஏதேனும் ஏழை பள்ளி மாணவ மாணவியருக்கு தீபாவளி புத்தாடை வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நிகழ்வானது இந்த வருடம் இன்று 26/10/2018 வடசென்னை புளியந்தோப்பு டிகோஸ்டர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.

இந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள் பெரும்பாலோர் அப்பாவோ அல்லது அம்மாவோ இல்லாதவர்கள்,புத்தாடை வாங்க வசதியில்லாதவர்கள் என்று மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் படித்துவருகி்ன்றனர்.

இவர்களுக்கு தீபாவளிக்கான உடைகள் மற்றும் உட்கார்ந்து படிக்க வண்ணமயமான சிறு நாற்காலிகள் வழங்கப்பட்டது. இதற்காக நடந்த விழாவில் திரளான பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்,எவர்வின் பள்ளி தாளாளர் புருசோத்தமன் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசும்போது பெரிய பெரிய விழாக்கள் கொடுக்காத சந்தோஷத்தை இந்த எளிய விழா கொடுத்துள்ளது.பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் தாங்கள் எடுக்கும் படங்களின் மூலம் மற்றவர்களை எப்போதுமே சந்தோஷப்படுத்திக் கொண்டு இருப்பார்கள் இப்போது தீபாவளி துணிகளை எளிய மாணவர்களுக்கு கொடுத்தும் சந்தோஷப்படுகின்றனர் .இந்த பள்ளியை இந்த மாணவர்களை தேர்ந்து எடுத்ததன் மூலமாகவே அவர்களது ஈரமான இதயத்தை உணர முடிகிறது தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள் என்றார்.

மற்றவர்கள் பேசும்போது இந்த தொண்டின் மூலம் ஊடகதுறையினரின் இமேஜை ஒரு படி உயர்த்தியுள்ளனர் மற்ற இடங்களில் உள்ள ஊடகத்துறையினருக்கும் உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றனர் என்றனர்.

விழா முடிந்த திரும்பும் போது பல குழந்தைகள் தங்களுக்கு வழங்கப்பட்ட புத்தாடையை நெஞ்சோடு சேர்த்து பிடித்துக்கொண்டிருந்தனர் அத்தனை பேரின் கண்களிலும் தீபவாளியின் மகிழ்ச்சியின் மகிழ்ச்சியை காணமுடிந்தது.

-எல்.முருகராஜ்

murugaraj!dinamalar.in





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X