கருவிகளை பயன்படுத்தும் காகங்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கருவிகளை பயன்படுத்தும் காகங்கள்!

Added : நவ 01, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கருவிகளை பயன்படுத்தும் காகங்கள்!

காகங்கள் புத்திசாலிகள் என்பது காலங்காலமாகத் தெரிந்தது தான்.
மரத்தின் இடுக்குகளில் இருக்கும் புழுக்களை குச்சி மூலம் வெளியே எடுத்து உண்பது; வீசப்பட்ட தண்ணீர் பாக்கெட்டில் காலால் மெட்டியபடி மீதமுள்ள நீரை குடிப்பது; தெருக் குழாயை காலால் திறந்து தண்ணீர் குடிப்பது. இப்படி எளிய கருவிகளை பயன்படுத்தும் திறன் காகத்திற்கு உண்டு.
ஆனால், காகங்களை வைத்து ஆராய்ச்சி செய்து வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அவை சிக்கலான கருவிகளையும் கையாளக் கற்றுக்கொண்டுள்ளன என்பதை அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.
சோதனைகளின் போது, சில சிறிய குழாய்கள், குச்சிகள் ஆகியவற்றை இணைத்து நீண்ட குச்சியாக உருவாக்கி, அதை வைத்து சற்று எட்ட வைக்கப்பட்டிருக்கும் உணவை எடுத்து அவை உண்ணக் கற்றுக் கொண்டதை கண்டு, ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.
காகங்களுக்கும், அவற்றின் இனத்தைச் சார்ந்த சில பறவைகளுக்கும், புதிய பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று கற்பனை செய்து பார்க்கும் திறன் இருக்க வேண்டும் என, ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சக்தி - chennai,இந்தியா
12-நவ-201814:06:00 IST Report Abuse
சக்தி இதுவா உங்க டக்கு...
Rate this:
Share this comment
Cancel
Annamalai Palaniappan - Houston,யூ.எஸ்.ஏ
12-நவ-201802:43:19 IST Report Abuse
Annamalai Palaniappan எங்க ஊரு காக்கைங்கள்ளெலாம் பிரிட்டிஷ் ஆட்சிலேஏ கல்லு போட்டு பானைல தண்ணி குடிச்சிதுங்க இப்ப தான் இந்த காக்க கதையே படிக்கிறீங்களாடா அக்சிபோர்ட்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X