மென்பொருள் வரைந்த ஓவியம் பல கோடிக்கு ஏலம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மென்பொருள் வரைந்த ஓவியம் பல கோடிக்கு ஏலம்!

Added : நவ 01, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மென்பொருள் வரைந்த ஓவியம் பல கோடிக்கு ஏலம்!

பாரிசில் ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வரைந்த ஓவியம், பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. பிரபல ஏல அமைப்பான, 'கிறிஸ்டீஸ்' நடத்திய இந்த ஏலத்தில், 10 ஆயிரம் டாலர்களுக்கே ஏலம் போகும் என, வல்லுனர்கள் கணித்திருந்தனர்.
ஆனால், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வரைந்த ஓவியம் ஏலத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்பதால், அது, 3.18 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த புதிய முயற்சியை மேற்கொண்டதும், பாரிசைச் சேர்ந்த ஆப்வியஸ் என்ற ஓவியர்களின் குழு ஒன்று தான்.
'போர்ட்ரெய்ட் ஆப் எட்மண்ட் பெலாமி' என்ற அந்த ஓவியத்தை வரைவதற்கு, செயற்கை நுண்ணறிவு நிரல்களில், 'ஜெனரேட்டிவ் அட்வெர்சரியல் நெட்வொர்க்' என்ற வகை நிரல்களை ஓவியர்கள் பயன்படுத்தினர்.
இந்த நிரலில் ஒரு பகுதி, 'படைப்பாளி'யாகவும், இன்னொரு பகுதி விமர்சகராகவும் செயல்பட்டன. கடந்த, 14 மற்றும் 20ம் நுாற்றாண்டு காலத்தில் வரையப்பட்ட, 15 ஆயிரம் ஓவியங்கள் செயற்கை நுண்ணறிவுக்கு தரப்பட்டன.
அவற்றை அடிப்படையாக வைத்து, படைப்பாளி நிரல், புதிதாக ஓர் ஓவியத்தை வரைந்தது. பிறகு அந்த ஓவியத்திற்கும், அசல் மனித உருவத்திற்கும் வேறுபாடு இருந்தால், அதை விமர்சகர் நிரல் நிராகரித்தது.
தான் வரைந்தது அசல் மனிதர்களைப் பார்த்து தான் என, விமர்சகர் நிரலை நம்ப வைப்பது தான் படைப்பாளி நிரலின் வேலை. அப்படி விமர்சகர் நிரல் ஏற்றுக்கொண்ட சில ஓவியங்கள் தான், ஏலத்தில் இத்தனை கோடிக்கு விற்றுள்ளது.
ஏற்கனவே, கதை, கவிதை, இசை, பாடல்கள் என, செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் படைப்புத் திறனை காட்டியுள்ளன.
சொல்லப்போனால், புகைப்படம் போலவே வரைவது முதல், 'சர்ரியலிசம்' எனப்படும் மிகை மெய் பாணி ஓவியம் வரை, செயற்கை நுண்ணறிவு நிரல்கள் ஓவியமாக வரைந்துள்ளன. ஆனாலும், அவற்றை யாரும் ஏலத்திற்கு கொண்டு வரவில்லை!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X