ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லை: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லை
தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

கொழும்பு: 'பார்லிமென்டில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, அதிபர் மைத்ரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக ஓட்டளிப்போம்' என, இலங்கை தமிழர் கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ராஜபக்சே, தமிழ், தேசிய ,கூட்டமைப்பு, இலங்கை


அண்டை நாடான, இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு, புதிய பிரதமராக, மகிந்த

ராஜபக்சேவை நியமித்து, அதிபர், மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் உத்தரவிட்டார். மேலும், வரும், 5ம் தேதி கூடுவதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டத்தை, 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார் சிறிசேன. ஆனால், 'பிரதமர் பதவியில் தொடர்கிறேன். என் பலத்தை நிரூபிக்க, பார்லியை உடனடியாககூட்ட வேண்டும்' என, ரணில் கோரி வருகிறார். இந்த அதிரடி நடவடிக்கைகளால், இலங்கையில், மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானத்தை, ரணில் விக்கிரமசிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்துள்ளது.
பார்லிமென்ட் அடுத்து கூடும்போது, இந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தம், 225 உறுப்பினர்கள் உடைய பார்லியில், விக்கிரமசிங்கேவுக்கு, 103 பேர் ஆதரவு உள்ளது; ராஜபக்சேவுக்கு, 100 பேரின் ஆதரவு உள்ளது.

Advertisement

தமிழர் கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட, மீதமுள்ள, 22 எம்.பி.,க்கள், ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக, பார்லியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், தீர்மானத்தை ஆதரிப்போம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. ராஜபக்சேவுக்கு தங்களுடைய ஆதரவு இல்லை என, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்தக் கட்சியின், 16 எம்.பி.,க்களில், நான்கு பேர், ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
07-நவ-201818:10:38 IST Report Abuse

Somiah Mஎன்றாவது தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்துள்ளதா ?அழிய பிறந்தவர்கள்தாம் இலங்கை தமிழர்கள் .போலும் .

Rate this:
D.RAMIAH - RAIPUR,இந்தியா
04-நவ-201818:35:43 IST Report Abuse

D.RAMIAHஎங்கே வை கோ வை காணோம் உடனே கூப்பிடவும் வாழ்க இலங்கை தமிழர்கள் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-நவ-201815:33:14 IST Report Abuse

Endrum Indianசீமானும் - வைகோவும் - திருமாவளவனும் - ஸ்டாலினும் - கனிமொழியும் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் என்று சொல்லவேண்டும் போல இருக்கின்றது

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X