தி.மு.க., குடும்ப பிரச்னையால் காங்., மேலிடம் கவலை| Dinamalar

தி.மு.க., குடும்ப பிரச்னையால் காங்., மேலிடம் கவலை

Added : நவ 04, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தி.மு.க., குடும்ப பிரச்னையால் காங்., மேலிடம் கவலை

'பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கக் கூடாது' என்பதில், காங்., தலைவர் ராகுல் பிடிவாதமாக உள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி என சொல்லி வந்தாலும் பல பிரச்னைகள் இருப்பதாக, டில்லி காங்., வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால், நடிகர் கமல், திருமாவளவன் ஆகியோரையும் கையில் வைத்துள்ளது, காங்கிரஸ். தி.மு.க.,வில் குடும்ப பிரச்னை அதிகமாகி உள்ளதால், அது, தமிழகத்தில் வெற்றியைப் பாதிக்குமோ, என, அச்சப்படுகின்றனர், காங்., தலைவர்கள்.லோக்சபா தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து போட்டியிட விரும்புகிறார், கனிமொழி. ஸ்டாலினோ, 'அது வேண்டாம்; ராஜ்யசபா எம்.பி., சீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்' என்கிறாராம். இது, கனிமொழியின் அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம். 'தயாநிதிக்கு, 'சீட்' கொடுக்கும்போது தன் மகளுக்கு கொடுக்கக் கூடாதா' என்பது அவரது கேள்வி.'இருவருக்கும் லோக்சபா சீட் கொடுப்பது கஷ்டம்; ஒருவர், ராஜ்ய சபாவிற்கு போகலாம்' என்பது ஸ்டாலின் வாதம். இது குடும்பத்தில் கசப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுமட்டுமல்லாமல், உதயநிதி ஸ்டாலின் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்படுகிறது. 'ஸ்டாலின் வெறும் அறிக்கை விட்டே அரசியல் நடத்துகிறார்; இதெல்லாம் இப்போது எடுபடாது' என, தி.மு.க., தலைவர்கள் இடையே கருத்து நிலவுகிறது. தவிர, தினகரன் செல்வாக்கு பெற்று வருவது, தி.மு.க.,வை சோகத்தில்ஆழ்த்தி உள்ளது.தி.மு.க.,விற்குள் நடக்கும் குடும்ப பிரச்னைகளைச் சுட்டிக் காட்டும், டில்லி, காங்., தலைவர்கள், 'தினகரனுடன் கூட்டணி அமைத்தால் என்ன...' எனவும் விவாதித்து வருகின்றனராம்.அதோடு, 'தி.மு.க., ஐந்து அல்லது ஆறு தொகுதிகளுக்கு மேல் கொடுக்காது; குடும்ப சண்டை; தி.மு.க., - -அ.தி.மு.க., மீது மக்கள் வெறுப்பு, என இருக்கும்போது தினகரனோடு போனால் என்ன...' என, காங்., தலைவர்கள் தீவிர மாக ஆலோசித்து வருகின்றனராம்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
10-நவ-201809:53:58 IST Report Abuse
ramanathan களவாணி காங்கிரஸ் கட்சியும் தமிழக திராவிட முன்னேற்றக் கழகம் களவாணி களும் ஒன்றுதான் களவாணிகள் கூட்டணி அமைப்பதில் தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel
rajan - erode,இந்தியா
08-நவ-201810:06:06 IST Report Abuse
rajan காங்கிரசில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. சண்டை போடும் தலைவர்கள் தான் அதிகம். தலைவர்கள் ஒன்று பட்டு நின்றால் தொண்டர்கள் படை உருவாக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
07-நவ-201820:40:44 IST Report Abuse
murali காங்கிரெஸ்ஸ்ஸ் தி மு க விற்கு கால் அமுக்கி விட்டு, கை கால் கழுவிவிட்டு, பிழைப்பு ஒட்டிகொண்டிருக்கும் கட்சி. அதற்கு ரோஷத்தை பார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X