கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை

Added : நவ 04, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்தியா, ஈரான், கச்சா எண்ணெய், ஆலோசனை

புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.


தடை நீக்கம்

ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.


ஆலோசனை தீவிரம்இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.



கண்காணிப்பு

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
10-நவ-201818:17:50 IST Report Abuse
S.Ganesan இந்தியாவின் பணம் ரூபாய். ஈரானின் பணம் ரியால். அப்படி இருக்க டாலரில் இரு நாடுகளும் வர்த்தகம் செய்வதால் ஒன்றும் செய்யாமலேயே அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும். வர்த்தகம் செய்யும் நாடுகளின் பண மதிப்பு குறையும். இதை உணர்ந்து இரு நாடுகளும் இதை தவிர்க்கவே ரூபாயில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளன என்று நினைக்கிறேன். நல்ல முடிவு.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
05-நவ-201811:25:42 IST Report Abuse
Rpalnivelu தற்போதைய இந்தியாவின் ஒரே விடிவெள்ளி நமோ மட்டுமே. மற்றதெல்லாம் டம்மி பீசுகளே.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-நவ-201808:03:05 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பிடினாலும் கொடுங்கப்பா... ஆனால் அதன் விலையை தங்கத்திற்கு நிகராக மோடி கொண்டு வருவார் போல உள்ளது... இது மாதிரி மக்களுக்கு சேவை செய்ய இன்னொருவர் உலகில் பிறக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X