சிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி| Dinamalar

சிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி

Added : நவ 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி

''வெள்ளை வானத்தில் கருப்பு நிலா, பிரம்மன் ரசனையின் தனித்துவம் அவள் கண்கள்'' என வர்ணிக்க துாண்டும் கண்கள், மத்தாப்பூ சிரிப்புக்கு சொந்தக்கார தொகுப்பாளினி, சிங்கப்பூர் ரசிகர்களின் மனதை கவர்ந்த குறும்பட நடிகை சஜினி,32. சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்.

கடந்த 3 தலைமுறையாக எங்கள் குடும்பத்தினர் சிங்கப்பூரில் வசிக்கிறோம். அப்பா ராணுவ அதிகாரி, அம்மா ஆசிரியை. நான் ஒரே மகள். பயோமெடிக்கல் சயின்ஸ், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்து 10 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்தேன். பரதம், கர்நாடகா இசை தெரியும். எனது 17வது வயதில் சிங்கப்பூர் 'டிவி'யில் 'இளமை காண்கிறேன்' நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனேன். நகைச்சுவை உணர்வோடு தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் எனக்கு 'சிங்கப்பூர் நகைச்சுவை அரசி' என பட்டம் வைத்துள்ளனர். 'சஜி என் குமார்' 'டிவி' தொடர் மூலம் தமிழக தொழில்கள், இந்திய பாரம்பரியம் சிங்கப்பூரில் வளர்ந்த விதம் குறித்த கதையில் நடித்துள்ளேன்.

கலாசாரம், மொழி, உணவு பழக்கங்களில் தமிழர்கள் கலாச்சாரத்தை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பின்பற்றுகின்றனர். இயக்குனர் லட்சுமியின் 'அடையாளம்' குறும்படம் தமிழர்களின் கலாசாரத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொகுப்பாளினி பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழரின் பாரம்பரியம் அறிய மதுரை, மானாமதுரையில் தமிழர்களின் கலாசாரத்தை படித்து சென்றோம். நான் நடித்த இரு குறும்படம் சிங்கப்பூர், ஜப்பானில் நடந்த இன்டர்நேஷனல் பிலிம் விருது விழாவில் பாராட்டை பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் தீபாவளிக்கு தமிழர்கள் புனித நீராடி, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். அப்பார்ட்மென்ட் வீடுகள் அதிகம் இருப்பதால் அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் மத்தாப்பூ வகை பட்டாசுகளை மட்டுமே வெடித்து கொண்டாடுவர். இங்கு பொங்கல், சித்திரை பிறப்பு என தமிழர் விழாக்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.

'வேட்டை' 'டிவி' தொடரில் வில்லி கேரக்டரில் நடித்துள்ளேன். திரைப்படத்தில் நடிக்க ஆசை உண்டு. தற்போது 'திரை எக்ஸ்பிரஸ்' டாக்குமெண்டரி படத்தில் நடிக்கிறேன் என்றார். மத்தாப்பூ சிரிப்புடன் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.இவரை பாராட்ட sajini.n@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X