பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பேச்சு, பேட்டி, அறிக்கை

'யார் கூடவும் கூட்டணி கிடையாதுன்னு சொன்ன உங்க சுருதி குறையுதே... தேர்தல் நெருங்க, நெருங்க, எந்த கூட்டணியிலாவது சேர்ந்தா போதும்கிற நிலைக்கு வந்துடுவீங்களோ...' என கேட்க தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி: காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் வராது. லோக்சபா தேர்தலுடன் இணைந்து, இடைத்தேர்தல் மட்டுமோ, சட்டசபை தேர்தலும் சேர்ந்தோ வரும். லோக்சபா தேர்தலில், பா.ம.க.,வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து, இப்போதே கூற இயலாது. தேர்தல் தேதி அறிவித்த பின், எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம். ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, தேர்தலை சந்திப்போம்.

'ராகுல் மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை, அவருக்கே அவர்கிட்ட இருக்கிற மாதிரி தெரியலையே' என கேட்க தோன்றும் வகையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி: பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் பாதுகாப்பு இருக்காது. மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். அதற்கு மாற்று சக்தியாக, தேசிய அளவில், காங்., மட்டுமே உள்ளது. ராகுல் தவிர்த்து வேறு ஒருவரையோ, மூன்றாவது அணியையோ முன்னிலைப்படுத்தினால், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. தி.மு.க.,விற்கு ஆதரவு அளிப்போம். பொதுத்தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்.

'ஆரம்பத்துல, நீங்களும் தினகரன் முகாம்ல இருந்தவங்க தானே... அந்த அனுபவம் பேசுது போல...' என சொல்ல தோன்றும் வகையில், அ.தி.மு.க., மகளிரணி செயலர் விஜிலா சத்தியானந்த் பேச்சு: ஜெ.,யால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை, பழனிசாமி அரசு நிறைவேற்றுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி நீர் பிரச்னை ஆகியவற்றில், சட்டப்போராட்டம் நடத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியது, அ.தி.மு.க., அரசு. இதை, நம்பியவர்கள் என்றும் காப்பாற்றப்படுவர். ஆனால், தினகரனை நம்பி போன, 18 எம்.எல்.ஏ.,க்கள், தற்போது அழுது கொண்டிருக்கின்றனர்.

'அது சரி... ஜெயில், உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் புதுசா என்ன... மாமியார் வீடு மாதிரி தான், அடிக்கடி போயிட்டு வந்திருக்கீங்களே...' எனக் கூற தோன்றும் வகையில், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் பேட்டி: அ.தி.மு.க., அரசு பதிவு செய்யும் பொய் வழக்குகளுக்கெல்லாம் முன்ஜாமின் வாங்க முடியாது. என்னை கைது செய்தால், சிறை செல்லத் தயாராக உள்ளேன். முத்துராமலிங்க தேவர் பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்ததாகக் கூறி, எங்களை கைது செய்தால் நீதிமன்றம் செல்வோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X