காங்கிரசுடன் கைகோர்த்த சந்திரபாபுவுக்கு நெருக்கடி Dinamalar
பதிவு செய்த நாள் :
நெருக்கடி!
காங்கிரசுடன் கைகோர்த்த சந்திரபாபுவுக்கு...
ராமா ராவின் 2வது மனைவி போர்க்கொடி
தெலுங்கு தேசம் தலைவர்களும் புலம்பல்

ஐதராபாத் : ஆந்திர முதல்வரும், தங்கள் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, பரம விரோதியான காங்கிரசுடன் கைகோர்த்ததால், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் முதல்வர், என்.டி.ராமா ராவின், இரண்டாவது மனைவியான, லட்சுமி பார்வதியும், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார்.

காங்கிரஸ்,சந்திரபாபு,ஸ்டாலின்,நெருக்கடி


ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இம்மாநிலத்திற்கு, மத்திய அரசு, சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் கட்சி விலகியது.

3வது அணி:


காங்கிரஸ் - பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், சந்திரபாபு இறங்கினார். ஆனால், கவுரவ பிரச்னை காரணமாக, மாநில கட்சிகளின் தலைவர்கள் சிலர், இதற்கு ஒத்துழைக்க மறுத்தனர். வேறு வழியில்லாமல், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கில், தன் பரம விரோதியான, காங்.,குடன், தெலுங்கு தேசம் கூட்டணி அமைந்துள்ளது.

'ஜனநாயக ரீதியில் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால், காங்., உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது' என, முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். ஆனால், காங்கிரசுக்கும், தெலுங்கு தேசத்துக்கும் ஜென்ம பகை என்பது, அரசியல் வட்டாரங்களில் தெரிந்த விஷயம் தான்.

காங்கிரசின் ஆதிக்க போக்கிற்கு எதிராகவே, தெலுங்கு தேசம் கட்சியை, ஆந்திர முன்னாள் முதல்வரும், பழம்பெரும் தெலுங்கு நடிகருமான, மறைந்த, என்.டி.ராமா ராவ், துவக்கினார்.

'காங்கிரசின் சர்வாதிகார போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்படுவேன்' என, ராமா ராவ், அப்போது கூறினார். இந்நிலையில், காங்கிரசுடன், தங்கள் தலைவர், கை கோர்த்ததை, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை.

பூகம்பம் :


பெரும்பாலான தலைவர்கள், இதற்கு வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும், உள்ளுக்குள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், தெலுங்கு தேசம் கட்சியில், எப்போது வேண்டுமானாலும், பூகம்பம் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, என்.டி.ராமா ராவின் இரண்டாவது மனைவி, லட்சுமி பார்வதி, 64, தன் கணவருக்கு எழுதுவது போன்ற ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: காங்.,கின் அட்டூழியங்களை எதிர்ப்பதற்காகவே, ராமா ராவ், தெலுங்கு தேசம் கட்சியை துவக்கினார். எந்த நோக்கத்துக்காக கட்சி துவங்கப்பட்டதோ, அதற்கு மாறாக, காங்., உடன், தெலுங்கு தேசம் கட்சி, தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இதனால், ஆந்திர மக்களின் சுயமரியாதை பறிபோய் உள்ளது.

ஆந்திர மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க, என் கணவர் ராமா ராவ் மீண்டும் மறுபிறவி எடுத்து வர வேண்டும். ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள களங்கத்தை, அவர் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் எழுதியுள்ளார்.

ராமா ராவ், 1982ல், தெலுங்கு தேசம் கட்சியை துவக்கினார். 1983ல் நடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, ஆந்திர முதல்வராக பதவியேற்றார்.

Advertisement

2வது திருமணம் :


பின், 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய ராமா ராவ், 1994ல் மீண்டும் ஆட்சியை பிடித்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன், லட்சுமி பார்வதியை இரண்டாவதாக திருமணம் செய்தார். இதனால் அதிருப்தியில் இருந்த, ராமா ராவின் மருமகன், சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றி, முதல்வரானார். 1996, ஜனவரியில், ராமா ராவ் காலமானார். லட்சுமி பார்வதி, 2014ல், ஒய்.எஸ்.ஆர்.காங்.,கில் சேர்ந்தார்.

ஸ்டாலின் தலைமையில் கூட்டம்?

அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை தனிமைப்படுத்த வியூகம் அமைக்கும் பணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, மாநில கட்சிகளின் தலைவர்கள் சிலர், அவரது வீட்டை நோக்கி, படையெடுக்க துவங்கி உள்ளனர். இதனால், உற்சாகமடைந்துஉள்ள சந்திரபாபு நாயுடு, தற்போது, ஆந்திர தலைநகர் அமராவதியில், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன், கர்நாடக முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான, குமாரசாமி உள்ளிட்டோருடன், அவர் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், இந்த கூட்டத்தில், தி.மு.க., தலைவரான ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டம், அமராவதியில் உள்ள, ஆந்திர முதல்வர் வீட்டில் நடக்க உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெட்டி பிஜேபி வெறுப்போர் சங்கம் - பெயர் மாற்றும் திறமைசாலிகள் ஊர்,இந்தியா
12-நவ-201808:30:46 IST Report Abuse

வெட்டி பிஜேபி  வெறுப்போர் சங்கம்பாஜகவை விட காங்கிரஸ் ஒன்றும் கயவாளி சர்வாதிகாரிகள் இல்லை. பாஜக தான் மக்கள் விரோத கார்பொரேட் கைக்கூலி அரசு.

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-நவ-201804:54:58 IST Report Abuse

J.V. Iyerநாயுடு எதிர்கட்சியில் சேர்ந்து அதை சின்னாபின்னமாக்குவதற்க்கே வந்திருக்கிறார். இது போக போகத்தான் தெரியும். முட்டாள் எதிர் கட்சிகள்.

Rate this:
bal - chennai,இந்தியா
09-நவ-201810:49:12 IST Report Abuse

balஇதே ஆள் காங்கிரஸ் பற்றி கேவலமா பேசித்தான் பதவிக்கு வந்தார். அதே போல் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ராகுலை கேவலமா பேசிய குமாரசாமி இப்போது காங்கிரஸ் வாலை பிடித்துக் கொண்டுதான் பதவியில் இருக்கிறார். பதவியில் இருக்க வேண்டுமானால் மானம் வெட்கம் எதுவும் இருக்காது போல...

Rate this:
மேலும் 89 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X