ராமர் கோவில் கட்டுங்க! ஹிந்து அமைப்பு உத்தரவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ராமர் கோவில் கட்டுங்க!
ஹிந்து அமைப்பு உத்தரவு

புதுடில்லி : 'அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அவசர சட்டம் அமல்படுத்த வேண்டும்' என, அகில பாரதிய சந்த் சமிதி என்ற, ஹிந்து அமைப்பு கூறியுள்ளது.

ராமர் கோவில்,கட்டுங்க,ஹிந்து அமைப்பு,உத்தரவு



டில்லியில் நேற்று, அகில பாரதிய சந்த் சமிதி அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 3,000 சாமியார்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசியோர், 'பசு பாதுகாப்பு, கங்கை நதி துாய்மையாக்கல், ராமர் கோவில்

கட்டுதல் ஆகியவற்றை நிறைவேற்ற, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்' என, வலியுறுத்தினர்.


இந்த அமைப்பின் ஆதரவாளர், ராமானந்த் ஹன்ஸ்தேவாசார்யா பேசுகையில், ''உ.பி., மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அவசர சட்டம் அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம்,'' என்றார்.

அயோத்தியில், சரயு நதி அருகே, பிரமாண்டமான ராமர் சிலை அமைக்கப்படவுள்ளதாக, உ.பி., அரசு தெரிவித்துள்ளது. இந்த சிலை, சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட, மிக உயரமானதாக இருக்க வேண்டும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

-அசம் கான் உ.பி., - எம்.எல்.ஏ., சமாஜ்வாதி



Advertisement

'விளக்கேற்ற வேண்டும்'

''ராமர் கோவில் கட்டுவதை நனவாக்குவதற்கான காலம் வந்து விட்டது. ஒவ்வொருவரும், ராமர் பெயரில், தங்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். தீபாவளி நாள் முதல், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்,'' என, உத்தரபிரதேச மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதனால், ஹிந்து அமைப்புகள் மத்தியில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக புதிய உற்சாகம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.




Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
09-நவ-201810:38:43 IST Report Abuse

Nisha Rathiராமர் கோவில் கட்டுவது எங்களின் உயிரினும் மேலான விருப்பம் ஆகும் தயவுசெய்து மாற்று மதத்தவரும் முன்வந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்

Rate this:
TAMILANNNNNNN - pakkatu orutan,இந்தியா
05-நவ-201823:14:42 IST Report Abuse

TAMILANNNNNNNயாரவது மக்களுக்கு நல்லது பண்றதுக்கு நெனைக்கிறாங்கல கோவில் கட்டணும் சிலை வைக்கணும் அப்படி தான் யோசிக்கிறாங்க. போங்கய்யா நீங்களும் உங்க புத்தியும்........

Rate this:
Manian - Chennai,இந்தியா
08-நவ-201803:54:56 IST Report Abuse

Manianவேறே எதிலே நெறய கொள்ளை அடிக்க முடியும்? கோயிலும் , சிலைகளும் குத்தம் சொல்லுமா? கோர்ட்டுக்குப் போகுமா? பின்னாலே, சிலைகளை திருடி விக்க முடியுமே சமுதாய சேவைன்னா லஞ்சம் வாங்க ஆட்கள் ஓடியாருவானுகளே...

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
05-நவ-201816:19:23 IST Report Abuse

sahayadhasபிரபல சினிமா ரிலீஷ் அவதற்கு முன் தடை என்று விளம்பர படுத்துவது போல் உள்ளது

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X