வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு; 7ம் தேதி முதல் கன மழை எச்சரிக்கை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு
7ம் தேதி முதல் கன மழை எச்சரிக்கை

வங்கக் கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், 10 மாவட்டங்களுக்கு, 7ம் தேதி முதல், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனடியாக, கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்க கடல்,காற்றழுத்த தாழ்வு, 7ம் தேதி,கன மழை,எச்சரிக்கை


வடகிழக்கு பருவமழை, தமிழகத்தின் வட மாவட்டங்களில், மூன்று நாட்களாக பெரிய அளவில் பெய்யாவிட்டாலும், தென் மாவட்டங்களில், மிக கன மழையாக கொட்டி வருகிறது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில், 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மணிமுத்தாறு, குன்னுார், 6; மதுரை திருமங்கலம், 6; கொடுமுடி, அருப்புக் கோட்டை, சிவகங்கை, 4; மதுரை தெற்கு, குன்னுார், பொள்ளாச்சி, ராமநாதபுரம், 3 செ.மீ., மழை பெய்துள்ளது. வங்கக்கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் உள்ளதால், நாளை நள்ளிரவுக்கு பின், மழை துவங்கி, படிப்படியாக அதிகரிக்கும்.

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் உட்பட, 10 மாவட்டங்களில், பரவலாக மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கடலுக்கு சென்ற மீனவர்கள், உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய, துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும். இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு இடையே, 7, 8ம் தேதிகளில் கரையை கடக்கலாம்.

Advertisement

அதனால், 7, 8ம் தேதிகளில், தென் மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யும். குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், 8ம் தேதி வரை, அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே, குமரி முதல் மன்னார் வளைகுடா மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ளவர்கள், நாளைக்குள் கரை திரும்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
08-நவ-201813:40:11 IST Report Abuse

Ramஇன்று தேதி எட்டு. என் வீட்டு வாசலில் சூரியன் சுள்ளென்று கொளுத்துகிறான். வானிலை ஆய்வுமைய்ய அறிக்கை வாசிப்பளர்கள் தன் அலுவலக ஜன்னலை திறந்து பார்த்து ஜோசியம் சொல்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு சென்னையில் மழை இல்லை. Weather.com மை செக் செய்யவும்.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
05-நவ-201815:12:50 IST Report Abuse

Paranthamanவானிலை தகவல் முரணாக உள்ளது.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
05-நவ-201815:10:52 IST Report Abuse

Paranthamanமழையால் பாதிக்கும் பத்து மாவட்டங்கள் எது. மழை இந்து மகா சமுத்திரத்தில் பெய்து விட்டு போய்விடும்.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X