பிப்., இறுதியில் பொது தேர்வு; சி.பி.எஸ்.இ., அதிகாரி தகவல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிப்., இறுதியில் பொது தேர்வு
சி.பி.எஸ்.இ., அதிகாரி தகவல்

'அடுத்த ஆண்டு, பிப்ரவரி இறுதி வாரத்தில், பொது தேர்வுகள் துவங்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது.

10ம் வகுப்பு,பிளஸ் 2,தேர்வு,அட்டவணை


பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2வில், சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் தாமதமாவதால், மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வது பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றம்

மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப் பித்த உத்தரவுப்படி, நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அதாவது, 2019 மார்ச்சுக்குள் தேர்வை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை, 15ம் தேதிக்குள் வெளியிடப்படலாம்.

இந்நிலையில், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில், பொது தேர்வை துவக்க திட்டமிடபட்டுள்ளது. பிப்., இறுதி வாரத்தில், தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் துவங்கும். அதன்பின், மற்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.

Advertisement


எனவே, பள்ளிகள் மாணவர்களின் விபரங்களை, தாமதமின்றி பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, அந்தந்த மண்டல அதிகாரிகளை அணுகவும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-நவ-201808:28:52 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇப்பொழுதில் இருந்தே படித்தால் பெரும் வெற்றி உங்களுடையதே

Rate this:
rajan - erode,இந்தியா
05-நவ-201806:24:54 IST Report Abuse

rajanஇது மாணவர்கள் மீதுள்ள அக்கறையல்ல. தேர்தல் மீதுள்ள அக்கறை. உயர்நிலை கல்வி ஆரம்பிப்பது ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் என தள்ளிப்போடும் அரசுகள்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X