அணுசக்தி இருந்தும் அமைதியாக இருக்கிறோம்: எதிரிகளுக்கு மோடி எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அணுசக்தி இருந்தும் அமைதியாக இருக்கிறோம்: எதிரிகளுக்கு மோடி எச்சரிக்கை

Updated : நவ 05, 2018 | Added : நவ 05, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பொக்ரான், சோதனை, ஐ.என்.எஸ்., அரிஹன்ட்

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தியால் இயங்கி, கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்., அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.


உள்நாட்டு தயாரிப்பு;


அரிஹாந்த் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல். இதன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, இதை நாட்டுக்கு மோடி அர்ப்பணித்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: அரிஹாந்த் இந்தியாவின் வலிமைக்கு சான்றாக விளங்குகிறது. இதனை உருவாக்கி இதற்கென பணியாற்றிய அனைத்து பிரிவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஐ.என்.எஸ்., அரிஹாந்த் அணுசக்கி திறன் கொண்டது.

கடலில் இருந்து கொண்டு எதிரி நாட்டு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தது. எங்களை மிரட்டும் நாடுகளிடம் அமைதி காக்கிறோம். இது அண்டைய நாட்டின்பால் கொண்டுள்ள அன்பை காட்டுகிறது. அரிஹாந்த்தின் வெற்றி நமது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை காட்டி நம்மை யாரும் மிரட்ட முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


பொக்ரான் சோதனைக்கு பின்னர்


ஐ.என்.எஸ்., அரிஹாந்த் நீர்மூழ்கி கப்பல் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. கடலில் இருந்தும், தரையில் இலக்கையும், வானின் இலக்கையும் தாக்க முடியும். பொக்ரான் சோதனைக்கு பின்னர் உலக அளவில் ஐ.என்.எஸ்., அரிஹாந்த் கப்பல் நமக்கு பெருமையை சேர்த்தது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Tamilnadu,இந்தியா
06-நவ-201803:03:00 IST Report Abuse
Indian indiavin ethiri andai naattil illai ,engae edapatta commentukalai paarthalae theriyum nam naadu munnerathukku thadayaaka ethainai ottunnikal nam nattukullae otti kondirikkirathu entu.
Rate this:
Share this comment
Cancel
M.Sundar - Manamadurai ,இந்தியா
06-நவ-201800:59:56 IST Report Abuse
M.Sundar அருமை 🌻
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
05-நவ-201823:51:14 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் என்பதால், இந்தியா அணு ஆயுதம் உள்ள நாடு மற்றும் நம்மை வீழ்த்த முடியாது என்று பெருமையுடன் கூறியுள்ளார். இதற்கு ஏன் இவ்வளவு கசப்பான கருத்துக்கள் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X