Karnataka By-Poll Results Today In Prestige Test For Ruling Alliance | கர்நாடகாவில் 4 இடங்களில் காங்., குமாரசாமி கூட்டணியினர் வெற்றி | Dinamalar

கர்நாடகாவில் 4 இடங்களில் காங்., குமாரசாமி கூட்டணியினர் வெற்றி

Updated : நவ 06, 2018 | Added : நவ 06, 2018 | கருத்துகள் (101)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கர்நாடகா, கர்நாடகா இடைத்தேர்தல், ஓட்டு எண்ணிக்கை, லோக்சபா இடைத்தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல், கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் , 
Karnataka, Karnataka bypoll, vote count, Lok Sabha bypoll, assembly by election, Karnataka by election results

பெங்களூரு:கர்நாடகாவின் மூன்று லோக்சபா, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, நடந்த இடைத்தேர்தலில், பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. இதில் 4 இடங்களில் காங்., குமாரசாமி கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் காலியாக இருந்த, ஷிவமொகா, பல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள், ராம் நகர், ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள், யாருக்கு ஓட்டு போட்டோம் என்று உறுதி செய்யும் இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்டன. பின், அந்தந்த ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.


இந்த முடிவில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் மாண்டியா, ராம்நகரா தொகுதிகளையும், காங்கிரஸ் பெல்லாரி, ஜாம்கண்டி தொகுதியையும் பிடித்தது. சிவமோகாவில் பா.ஜ., தன்வசம் வைத்து கொண்டது.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
06-நவ-201820:15:07 IST Report Abuse
தமிழ் மைந்தன் EVM மிஷின் வேலையை குமாரசாமி பார்த்துக் கொண்டார் என கொள்ளலாமா? அல்லது ஆர்.கே நகரில் திமுக டெபாசிட் இழந்ததினால் கட்சி வளராது என எடுத்துக் கொள்ளலாமா? இதற்கான பதிலை பாஜக எதிர்பாளர்களாகிய திமுக கம்பெனி ஊழியர்களிடம் எதிர்பார்க்கிறேன். பதில் வருமா?
Rate this:
Share this comment
Cancel
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-நவ-201819:31:32 IST Report Abuse
Shankar Nadar மோடிஜி அதிரடிஎல்லாம் போதும். தேர்தல் பக்கமும் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் தலைக்குமேலே வெள்ளம் போய்விடும் .
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-நவ-201818:27:51 IST Report Abuse
Pugazh V "காங்கிரசும் குமராசமியும் கூட்டு வைத்து இருப்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்". நிதிஷ்குமாருடன் 20/20 கூட்டு வைத்திருப்பது என்ன வாதம்? ஆளுக்கொரு நியாயமா?
Rate this:
Share this comment
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
06-நவ-201819:33:19 IST Report Abuse
Narayanஜனதா தளம், ஜனசங்கம் மூலம் உருவாகிய அனைத்து கட்சியும் பாஜக உட்பட அனைத்தும் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள்தாம். பாஜக நிதிஷ்குமாருடன் சேர்ந்தது எப்படி சந்தர்ப்பவாதம் ஆகும்? அதுதானே இயற்கை கூட்டணி. காங்கிரஸ் நிதிஷ்குமாருடன் சேர்ந்து இருந்ததுதான் உண்மையான சந்தர்ப்பவாதம். கொஞ்சம் அடிப்படை அரசியல் தெரிஞ்சிக்கோங்க......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X