ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

Added : நவ 07, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரிசர்வ் வங்கி, வாராக்கடன், உர்ஜித் படேல்

புதுடில்லி: வாராக் கடன் தொடர்பாக, பொதுத் துறை வங்கிகள் சிலவற்றின் மீதான, கடுமையான நடவடிக்கையை தளர்த்தவேண்டும் என, ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு கோரி வருகிறது.

இதன் மூலம், இவ்வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம் என்பது, மத்திய அரசின் யோசனை. மேலும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில், வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தி, அவற்றின் சொத்து மதிப்பை அதிகரித்து, சந்தையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், மத்திய அரசு விரும்புகிறது. இந்த யோசனைகளை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முயன்றதால், அவ்வங்கி இயக்குனர், உர்ஜித் படேல் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதனால், வரும், 19ல் நடைபெறும் ரிசர்வ் வங்கி இயக்குனர் கூட்டத்தில் அவர், தன்ராஜினாமா முடிவை வெளியிடுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
08-நவ-201813:22:58 IST Report Abuse
Sivagiri ஆனாலும் சில விஷ ஜந்துக்கள் வெளி நாட்டில் இருந்து கொண்டு காங்கிரஸ் கம்பெனி முதலாளிகளுக்கு விசுவாசம் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராகவும் பேட்டி கொடுக்கின்றன . . வேலை செய்கின்றன . . . அவற்றையும் ஐபி - ரா - மூலம் கவனிப்பது நல்லது . . .
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
08-நவ-201813:19:07 IST Report Abuse
Sivagiri காங்கிரஸ் கம்பெனியால் விதைக்கப் பட்ட விஷ ஜந்துக்கள் - தேசத்தின் அரசு எந்திரம் முழுவதும் நீக்கமற இருக்கின்றன . . . அவை நாட்டிற்காக வேலை செய்யாமல் கம்பெனி முதலாளிகளுக்காக - அவர்களின் கூட்டாளிகளுக்காக - அவர்களின் விரல் அசைவுக்கேற்ப வேலை செய்து பழகி விட்டன . . . அவற்றின் விஷத்தை அகற்றுவது சிரமம் . . . அவை தானாகவே ஒவ்வொன்றாக வெளியேற செய்வது நல்லது . . . மேலும் , சி.பி.ஐ - ஈ.டி. - ஐ.டி. - மூலமாக அவற்றின் விஷப் பல்லை பிடுங்குவதும் நல்லது . . .
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
08-நவ-201810:26:53 IST Report Abuse
Anandan எல்லா அமைப்பையும் சிதைச்சி வெறும் தலையாட்டி பொம்மைகள் மட்டுமே வேண்டும் என்றால் எதற்கு இத்தனை அமைப்பு, ஜனநாயகம் என்று ஏன் பெயர். திறனற்றவர்களின் ஆட்சி இப்படித்தான் கோமாளித்தனமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X