ஐ.டி.பி.பி., வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் மோடி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஐ.டி.பி.பி., வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் மோடி

உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலத்தில், இந்தியா - சீனா எல்லையில் பணியாற்றும், ஐ.டி.பி.பி, எனப்படும், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை வீரர்களுடன், தீபாவளியைக் கொண்டாடினார்,

ஐ.டி.பி.பி., வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி. உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, உத்தரகாசி மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 7,860 அடி உயரமுள்ள ஹார்ஷில் பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ளது.

இந்தியா - சீனா எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த முகாமில், துணை ராணுவப் படையான, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை, இந்த வீரர்களுடன் நேற்றுகொண்டாடினார், பிரதமர் நரேந்திர மோடி. 2014ல் பிரதமராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன், மோடி, தீபாவளியை கொண்டாடி வருகிறார்.கடும் பனி சூழ்ந்துள்ள ஹார்ஷில் பகுதியில் பணியாற்றும், ஐ.டி.பி.பி., வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி.
அப்போது அவர் பேசியதாவது:கடுமையான பனி சூழ்ந்துள்ள நிலையில், நாட்டை பாதுகாக்கும் மிகப் பெரிய கடமையில் இந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அர்ப்பணிப்பு உணர்வுடன், எல்லையில் வீரர்கள் பணியாற்றுவதால் தான், நாட்டில் உள்ள, 125 கோடி மக்களும் பாதுகாப்பாகவும், அச்சமில்லாமலும் வாழ்கின்றனர். நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு ஆண்டும்,

Advertisement

தீபாவளியை, ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறேன். ராணுவத் துறையில், நமது நாடு மிகப் பெரிய முன்னேற்றம் கண்டு வருகிறது. முன்னாள் வீரர்களுக்காக பல திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், கேதார்நாத் சென்று, மோடி வழிபட்டார். 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துவரும் புனரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

Advertisement

வாசகர் கருத்து (16+ 81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தென்னவள் - nagercoil,இந்தியா
08-நவ-201817:52:16 IST Report Abuse

தென்னவள்மோடி அவர்கள் மட்டுமல்ல... இந்தியாவின் பல பிரதமர்களும், அமைச்சர்களும் தீபாவளி கொண்டாட வேண்டியது இறந்து போன ராணுவ வீரர்களின் ஆன்மாக்களோடு தான்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-நவ-201812:37:18 IST Report Abuse

Nallavan Nallavanஎன்ன கொடுக்குறாரு ? அல்வாவா ??

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-நவ-201811:53:23 IST Report Abuse

மலரின் மகள்இந்த போட்டோ தான் கானலின் கலைநயம். உண்மையான சூப்பர் ஷாட்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X