நடிகர் விஜய்க்கு மந்திரி எச்சரிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நடிகர் விஜய்க்கு மந்திரி எச்சரிக்கை

துாத்துக்குடி ''சர்க்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், படத்திற்காக இல்லாமல், அரசியல் நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது போல் உள்ளது. வளர்ந்து வரும், நடிகர் விஜய்க்கு இது நல்லது கிடையாது,'' என, தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு எச்சரித்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிந்தலக்கரையில், விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், விளத்திக்குளம் தொகுதி அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்களான, செய்தித்துறை அமைச்சர் ராஜு, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமிபங்கேற்றனர்.பின், நிருபர்களிடம் பேசிய ராஜு, கூறியதாவது: தமிழகத்தில், 20 சட்டமன்ற

தொகுதிகளில் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த தொகுதியில், ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், வெற்றி பெறுவோம். தற்போது வெளியாகியுள்ள, சர்க்கார்

விஜய், சர்கார், அரசியல்

திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், படத்திற்காக இல்லாமல்,அரசியல் நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது போல் காண்பித்துள்ளனர். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும், நடிகர் விஜய்க்கு, இது நல்லது கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சர்க்கார்

Advertisement

திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து, அரசுக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து, முதல்வரிடம் ஆலோசனை நடத்தி, 'சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கக்கூடாது; நீக்க வேண்டும்' என்று அறிவுறுத்துவோம். அவர்களாக, நீக்கிவிட்டால் நல்லது, இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (40+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-201820:56:56 IST Report Abuse

ஆப்புவிஜயை குறை சொல்லி என்ன ஆகப் போகுது? முன்னாடியே சொன்சார் போர்டு ஆளுங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிச்சிருந்தாலாவது உபயோகமா இருந்திருக்கும்.

Rate this:
B Srinivasan - trichy,இந்தியா
08-நவ-201818:25:31 IST Report Abuse

B Srinivasan நடிகர்களை குறைகூறாதீர்கள், அவர்கள் டைரக்டர் சொல்வதை செய்பவர்கள் .

Rate this:
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
08-நவ-201815:50:56 IST Report Abuse

வேலங்குடியான்படம் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் தான்..... இருந்தாலும் இந்த திராவிட கட்சிகள் எப்படியாவது ஒழிக்கப்படவேண்டும்... படித்தவர்கள் ஆட்சி செய்யவேண்டும்... தெர்மக்கோல், போதமகன் எல்லாம் நாட்டுக்கு தேவையில்ல... ஆம்பளையா இருந்தா தேர்தல்ல நின்னு ஜெயிச்சு காட்டட்டும்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
09-நவ-201808:16:45 IST Report Abuse

Manianஅடுத்த மொதல்வராகணும்ன்னா இப்படி எல்லாம் செய்ய வேணாமா?...

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X