இடைத்தேர்தலுக்கு தயார் : கமல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தலுக்கு தயார் : கமல்

சென்னை: ''தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தலை நடந்தாலும், சந்திக்க தயார்,'' என, நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான, கமல் கூறினார்.

கமல், இடைத்தேர்தல், தயார்

சென்னையில், நேற்று தன், 64வது பிறநாள் விழாவை கொண்டாடிய, கமல் அளித்த பேட்டி: நான் பிறந்தநாள் வாழ்த்து கேட்பதைவிட, தமிழகத்திற்கு நல்ல பிறந்தநாள் அமைவது முக்கியம். அந்த நல்ல நாள் விரைவில் வரும்.


தமிழகத்தில், இடைத்தேர்தல் நடக்க உள்ள, 20 சட்டசபை தொகுதியிலும், மக்கள் நீதி மையத்தை சார்ந்த, 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராகஉள்ளனர். பணியாளர்கள் தேர்வு தொடர்ந்து வருகிறது. இடைத்தேர்தல் விரைவில் நடக்கும் என, உறுதியாக கூறமுடியாது. எப்போது இடைத் தேர்தல் நடந்தாலும், அதை சந்திக்க நாங்கள் தயார். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் என்பதே, மக்கள் நீதி மையத்தின் இலக்கு. நான் செல்லும் இடத்தில் எல்லாம் நான், வாக்குறுதி தருவதில்லை. ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என, பல ஊர்களில் மக்கள், வாக்குறுதி அளிக்கின்றனர். வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றுவர் என, நம்புகிறேன்.
நாட்டை ஆள வேண்டியவர்கள் மக்கள் தான். கூட்டணி குறித்த தகவல்களை, நானே தகவலாகத் தான் பார்க்கிறேன். கூட்டணி

Advertisement

குறித்து, இப்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களை திட்டி செய்யும் அரசியலை, நாங்கள் விரும்பவில்லை. மரியாதை கோட்டை நான் தாண்டியது இல்லை. எந்த கட்சிக்கும் நான் ஊதுகுழல் இல்லை. நான் மக்களின் கருவி. நாங்கள் பயணிக்கும் துாரம் அதிகம். ஆனால், எதிர்பார்த்ததை விட, வேகமாக முன்னேறியுள்ளோம். இவ்வாறு கமல் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (24+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.sankar_ - chennai,இந்தியா
10-நவ-201809:26:21 IST Report Abuse

m.sankar_முதலி உனக்கு டெபாசிட் கெடைக்குதான்னு பாரு. ஆமா ஓன்னுடைய ரெண்டாவது பொண்ணு மேல பத்தி கவனி. பாவம் .

Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
08-நவ-201818:45:22 IST Report Abuse

srinivasanமைகேல் மதன காம கமல ஹஸன்

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
08-நவ-201815:34:01 IST Report Abuse

ganapati sbஉன்னால் முடியும் தம்பி படத்தில் கிராமத்தை ஆக்கப்பூர்வமாக திருத்துவது போல நடித்த இப்போது மக்களை நேரடியாக சந்தித்து கிராமசபை போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒழுங்காக வரிக்கட்டும் கமலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X