உலகை சுற்றும் 'சோலார்' படகு| Dinamalar

உலகை சுற்றும் 'சோலார்' படகு

Added : நவ 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உலகை சுற்றும் 'சோலார்' படகு

சோலார் மின்சாரத்தில் இயங்கும் படகை, சுவிட்சர்லாந்து நிறுவனம் உருவாக்கியுள்ளது. கடல், ஆறு மற்றும் குளங்களில் படகு பயன்படுத்தப்படுகிறது. இதில் துடுப்பு, டீசல் மோட்டார், எலக்ட்ரிக் மோட்டார் என பல வகை படகுகள் உள்ளன. இவ்வகை படகுகளில் ஒரு குறிப்பிட்ட துாரம் தான் செல்ல முடியும். ஏனெனில் குறிப்பிட்ட துாரம் சென்றவுடன் எரிபொருள் தீர்ந்து விடும். எனவே இதற்காக பயணத்தை இடையில் நிறுத்த வேண்டும். மீண்டும் எரிபொருள் நிரப்பியவுடன் பயணம் தொடங்கும். இந்நிலையில் இப்பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும், இயற்கையாக கிடைக்கும் சோலார் மின்சாரத்தில் இயங்கும் படகினை, சுவிட்சர் லாந்தை சேர்ந்த ஜூரிச் நிறுவனம் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முயற்சிக்குப்பின் இப்படகை அந்நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்தப்படகு எரிபொருளை நிரப்புவதற்காக எந்த இடத்திலும் நிற்காமல், உலகை வலம் வந்து சாதனை படைத்துள்ளது. இப்படகு அளவில், கடலில் வாழும் நீலத்திமிங்கலத்தை விட பெரியது. படகின் மேற்பரப்பு முழுவதும், தேவையான அளவுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதில் 10 பேர் அமர்ந்து பயணிக்கலாம். தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இப்படகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளதால், ஒரே ஒரு நபர் மூலம் இப்படகு எளிதாக இயக்கப்படுகிறது.சோலார் மின்சாரத்தில் இயங்குவதால், இன்ஜினில் இருந்து வெளிவரும் சத்தம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் மேகமூட்டம் போன்ற இயற்கை சூழல்களை சமாளிப்பதற்காக, படகில் 65 கிலோவாட் திறனுள்ள டீசல் இன்ஜினும் உள்ளது.

நீளம்
படகின் நீளம் - 78 அடி
800
இப்படகில் உள்ள பேட்டரி, 800 கிலோவாட் மின்சாரத்தை சேமிக்கும் திறன் பெற்றது. இதன் மூலம், 10 மணி நேரம் பயணம் செய்யலாம். இதற்கிடையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை சேமித்துக்கொள்ளும்.
வேகம்
மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும்.
3,200
படகில் 3,200 சதுரடி பரப்பளவில் சோலார் பேனல்கள் பொருத்தப் பட்டுள்ளன.
விலை

படகின் விலை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X