தென்னை ஓலையில் இருந்து 'ஸ்ட்ரா' : தேவகோட்டை இளைஞர் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை ஓலையில் இருந்து 'ஸ்ட்ரா' : தேவகோட்டை இளைஞர் அசத்தல்

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தென்னை ஓலை, ஸ்ட்ரா, தேவகோட்டை, இளைஞர், அசத்தல்

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பொறியாளர் மணிகண்டன் தென்னை ஓலையில் ஸ்ட்ரா தயாரித்து வருகிறார்.சுற்றுச்சூழல் ஆர்வலரான மணிகண்டன்
நம்நாட்டில் விளையும் பொருட்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் பொருட்களைத் தயாரிப்பதற்காக பெங்களூருவில் ஐ.டி., நிறுவன பணியை துறந்தார்.கூல்டிரிங்சிற்கு மாற்றாக தாய்லாந்து தொழில்நுட்பத்தின் மூலம் இளநீரைப் பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்.
தற்போது கூல்டிரிங்ஸ் அருந்த பயன்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக பொறியாளர் ஷாஜிவர்கீசுடன் இணைந்து லீவிஸ்ட்ரா என்ற பெயரில் தென்னை மற்றும் பனை ஓலை ஸ்ட்ரா தயாரித்து வருகிறார்.மணிகண்டன் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த கிளைமேட் லாஞ்ச் பேட் கிரீன் பிசினஸ்'எனும் அமைப்பு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு போட்டி நடத்தி வருகிறது.
சென்னையில் செப்டம்பர் 20ல் நடத்தியது. அதில் எங்களின் லீவிஸ்ட்ரா நிறுவனம் பங்கேற்று உலக போட்டிக்கு தேர்வானது.இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் நவம்பர் 1,2ல் 130 அணிகள் பங்கேற்ற போட்டியில் நாங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்து இரண்டாயிரம் யூரோ டாலர்கள் பரிசாக வென்றோம்.சுற்றுச்சூழலை பாதிக்காத இது போன்று மற்ற பொருட்களையும் தயாரிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhuvanesh - Vellore,இந்தியா
08-நவ-201820:04:56 IST Report Abuse
Bhuvanesh சூப்பர் ப்ரோ....கண்டிப்பா இது பிளாஸ்டிக் ஸ்ட்ராவ்க்கு மாற்றாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran CJ - bangalore,இந்தியா
08-நவ-201812:30:03 IST Report Abuse
Rajasekaran CJ super. congrats
Rate this:
Share this comment
Cancel
08-நவ-201809:55:49 IST Report Abuse
கி.ரமேஷ் மணிகண்டண் அவர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X