Sour Over Russia Probe, Trump Fires US Attorney General Jeff Sessions | அமெரிக்க அட்டர்னி ஜெனரல் விலகல் பின்னணி| Dinamalar

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் விலகல் பின்னணி

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் விலகல் பின்னணி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சி, பெரும்பான்மை பலம் பெரும் நிலையில் உள்ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி, செனட் சபையை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெறவில்லை.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அரசு நிர்வாக பொறுப்புகளில் மாற்றம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். அதன் முதல் பலிகடாவாக அந்நாட்டு அட்டர்னி ஜெரனல் எனப்படும் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெப் செஷன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டெனால்டு டிரம்ப்பின் கோரிக்கை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.


ராஜினாமா பின்னணி


கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, அந்நாட்டின் உளவுத்துறை குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரத்தில் ரஷ்ய உளவாளிகள், 12 பேர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விஷயங்களில் ஜெப் செஷன்ஸ் செயல்பாடுகளால் டிரம்ப்புடன் மோதல் ஏற்பட்டதாலே ராஜினாமா முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ராஜினாமா குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியது, ஜெப் செஷன்ஸ் சேவைக்கு நன்றி அவர் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-நவ-201814:24:55 IST Report Abuse
Pasupathi Subbian அங்கே டிரம்ப் ஆடும் ஆட்டதற்கெல்லாம் தலையசைப்பவர்கள் பதவியில் இருக்கலாம் , எதிப்பவர்கள் பதவியை விட்டு விலகலாம் என்ற நடைமுறை , இந்த டிரம்ப் வந்து செய்த புரட்சிகளால் இந்திய மக்களுக்கு அமேரிக்கா செல்ல முடியாமல் பிரச்சனையில் உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
08-நவ-201812:53:25 IST Report Abuse
Ramakrishnan Natesan இதற்கும் காங்கிரஸ் தான் காரணம் முடிந்தது ஒரு வரியில்
Rate this:
Share this comment
Cancel
HSR - Chennai,இந்தியா
08-நவ-201810:09:08 IST Report Abuse
HSR இதற்கெல்லாம் காரணமாக அமைந்திட்ட மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப உடனடியாக வீறுகொண்டு எழுதம்பி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X