டெல்டாவில் சம்பா சாகுபடி விறுவிறு: இலக்கை எட்ட அதிகாரிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டாவில் சம்பா சாகுபடி விறுவிறு: இலக்கை எட்ட அதிகாரிகள் தீவிரம்

Added : நவ 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இலக்கை எட்ட, வேளாண் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்காக, ஆண்டுதோறும் ஜூன், 12ல், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, போதிய அளவு தண்ணீர் இல்லாததால், ஜூன், 12ல் அணை திறக்கப் படவில்லை.பின், கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு, ஜூலை, 19ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், கல்லணைக்கு, 22ம் தேதி வந்தது. அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில், தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த தண்ணீரை பயன்படுத்தி, சம்பா, தாளடி சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர். தற்போது, வட கிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி என, 3 லட்சம் ஏக்கரில், சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 2.20 லட்சம் ஏக்கரில் நடவு பணிகள் முடிந்துள்ளன. கடைமடை பகுதிகளுக்கு, தண்ணீர் முழுமையாக செல்லாததால், நடவு பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில், 2.60 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், 2.58 லட்சம் ஏக்கரில் சாகுபடி முடிந்துள்ளது. இதேபோல், நாகை மாவட்டத்தில், 2.55 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 2.54 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் முடிந்து உள்ளன.

இது குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: வரும், 20ம் தேதிக்குள், விடுபட்ட சம்பா சாகுபடி பணிகள் முழுமை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வட கிழக்கு பருவமழையும் விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது. தேவையான அளவு யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., உரம் இருப்பில் உள்ளது. இந்தாண்டு இலக்கை, முழுமையாக எட்ட முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X