போதையில் கோஷ்டி மோதல்: காயமடைந்த 15 பேர், 'அட்மிட்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் கோஷ்டி மோதல்: காயமடைந்த 15 பேர், 'அட்மிட்'

Added : நவ 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம்: நாகை அருகே, மது போதையில் இரு பிரிவினர் மோதிக் கொண்டதை தடுக்க வந்தவர்களுக்கும் உருட்டு கட்டை அடி விழுந்ததால், 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நாகை அடுத்த ஆவராணியைச் சேர்ந்தவர், சூர்யா, 20. நேற்று முன்தினம் கடைத்தெருவில் நண்பர்களுடன் மது போதையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வேகமாக வந்த, 19 வயது வாலிபரை தடுத்து நிறுத்தி, 'ஏன் வேகமாக வருகிறாய்?' என்று கேட்டத்தில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது. இதில் மது போதையில் இருந்த இருவரும் மோதிக் கொண்டனர்.இதையடுத்து, இருவரது ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், இரு தரப்பையும் சமாதானம் செய்ய வந்துள்ளனர். போதையில் இருந்த, 19 வயது வாலிபரின் தரப்பினர், சமாதானம் செய்ய வந்தவர்களை, உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கினர். இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த, 15 பேர், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கீவளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-நவ-201808:36:52 IST Report Abuse
Srinivasan Kannaiya டாஸ்மாக் மீதும் ஒரு வழக்கை பதிவு செய்யுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X