Women pilots' percentage in India is twice that of global average: Data | இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விமானிகள், இந்தியா, பெண்கள், அமெரிக்கா

மும்பை: சர்வதேச அளவில், மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான், அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக சர்வதேச பெண் விமானிகள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில், பெண் விமானிகளின் எண்ணிக்கை 5.4 சதவீதமாக உள்ளது. ஆனால் இது, இந்தியாவில் 12.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் பணிபுரியும் 8,797 விமானிகளில் 1,092 பேர் பெண்கள். இவர்களில் 385 பேர் கேப்டன்களாக உள்ளனர். சர்வதேச அளவில், 1.5 லட்சம் விமானிகளில் 8,061 பேர் பெண்கள். இதில், 2,190 பேர் கேப்டன்களாக உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


இந்தியாவில்,டில்லியை சேர்ந்த ஜூம் விமான நிறுவனம், தனது நிறுவனத்தில் 30 சதவீத பெண்களை விமானிகளாக பணியமர்த்தியுள்ளது. இங்கு விமானிகளாக தேர்வு செய்யப்படும் 30 பேரில் 9 பேர் பெண்கள். இதற்கடுத்த இடங்களில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் உள்ளன. இண்டிகோ நிறுவனத்தில் 2,689 விமானிகளில் 351 பேர்(13.9%) பெண்கள்.ஜெட் ஏர்வேசில் 1,867 விமானிகளில் 231 பேர்(12.4 %) பெண்கள். ஸபைஸ் ஜெட்டில் உள்ள 853 விமானிகளில் 113 பேர் (13.2%) பெண்கள். ஏர் இந்தியாவில் உள்ள 1,710 விமானிகளில் 217 பேர் (12.7%) பெண்கள் ஆவார்கள். அமெரிக்க விமான நிறுவனங்களை விட இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களில் தான் அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
08-நவ-201819:59:58 IST Report Abuse
அம்பி ஐயர் இது ரொம்ப நாளாகவே இருக்கே..... என்னமோ இப்பத்தான் ஆய்வு செஞ்சு கண்டுபிடிச்ச மாதிரி.....இண்டிகோ விமானத்துல நிறைய பெண் கேப்டன்கள் இருக்காங்க....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-நவ-201819:07:25 IST Report Abuse
Srinivasan Kannaiya பெண் விமானிகள் மட்டும் அல்ல மீ டு வுக்கு போகும் பெண் களும் அதிகம்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-நவ-201817:53:15 IST Report Abuse
மலரின் மகள் சிறப்பு. மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக முன்னேற வேண்டும். வேலைக்கு அமர்த்திய அனைத்து நிறுவனத்தாருக்கும் வாழ்த்துக்கள். சவுதியில் பெண்களை விமான சேவையில் அமர்த்த போவதாக விளம்பரம் செய்தார்களாம் சில நூறு வேலைக்கு லட்சத்தை தாண்டிய அளவில் விண்ணப்பங்கள் ஆன்லைனில் குவிந்ததால். பயிற்சி தந்து வேலையில் அமர்த்த வேண்டும். திருமண மான பெண்களும் அதில் அடக்கம் என்பது பெண்கள் வேலைக்கு செல்வதில் மற்றும் சுயசார்பு கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. ஆணை சார்ந்து பெண் வாழவேண்டிய அவசியமில்லை நவீன சமுதாயத்தில். ஆணையும் வளர்ப்பவள் தாய் தான். வளர்க்கும் பொது போதனைகளை சரியாக சொல்லவேண்டும். சமத்துவம் சமநிலை கூடிய அனைவருக்கும் உயர்வே சிறந்தது என்று. மதத்தை குறுக்கே விட கூடாது. மதம் குறுக்கே இருந்தால் அது சம்பந்தமான எந்த போதனைகளையும் வளரும் பருவத்தில் புகட்ட கூடாது. அப்படியே சமூகத்தில் அறிந்து வந்தால் அது சரியல்ல என்று நல்ல விலகிகத்துடன் போதிக்க வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் என்பது நம் நாட்டில் தான் சிறப்பாக இருக்கிறது. தலாக் என்பனதெல்லாம் செய்வதாக இருந்தால் இனி பெண்கள் தான் சொல்லவேண்டும். ஆணுக்கு அந்த உரிமை கிடையாது என்று தான் இருக்கவேண்டும். அது தான் நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X