Day after Diwali, Delhi's air turns 'hazardous' | டில்லியில் அபாய அளவை எட்டிய காற்று மாசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லியில் அபாய அளவை எட்டிய காற்று மாசு

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டில்லி, பட்டாசு, காற்று மாசு,  போலீசார்

புதுடில்லி: தீபாவளி நாளில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மக்கள் பட்டாசு வெடித்ததால், டில்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது.



காலக்கெடு நிர்ணயம்

டில்லியில் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாசை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டில்லியில், தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.



தடையை மீறி

ஆனால், மக்கள் இதனை பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும் பட்டாசுகளை வெடித்தனர். மயூர் விஹார் எக்ஸ்டென்சன், லஜ்பத்நகர், ஐபி எக்ஸ்டென்சன், துவாரகா, நொய்டா, ஜஹாங்கிர்பூர் போன்ற பகுதிகளில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால், டில்லியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. ஆனந்த் விஹார், ஜஹாங்கிர்புரி போன்ற பகுதிகளில் காற்று மாசு மோசமாக இருந்தது.


மோசம்

இன்று(நவ.,8) காலை 6 மணி நிலவரப்படி, டில்லியில், காற்று மாசு அளவு குறியீடு 805 ஆக இருந்தது. இந்த குறியீடானது, ஆனந்த் விஹாரில் 999 ஆகவும், அமெரிக்க தூதரகம், சாணக்யாபுரியில் 459 ஆகவும், மேஜர் தயான் சந்த் மைதானம் பகுதியிலும் 999 ஆக பதிவானது. டில்லியில், நேற்று இரவு 7 மணியளவில் காற்று மாசு குறியீடு 286 ஆகவும், 8 மணிக்கு 405 ஆகவும், 9 மணிக்கு 514 ஆகவும் பதிவாகியிருந்தது.



நடவடிக்கை

டில்லியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட போலீசார், இது தொடர்புடைய நபர்கள் மீது கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


கைது

இதனிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக டில்லியில், 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharath - Pennsylvania,யூ.எஸ்.ஏ
08-நவ-201821:10:15 IST Report Abuse
Bharath இந்தியாவில் இருக்கும் அணைத்து வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு செய்தாலே போதும். காற்று மாசு அடையாது. மாநகராட்சி பேருந்து, ஆட்டோ, லார்ரி சாலைகளில் பார்த்ததுண்டோ? அவை காக்கும் புகை. தேவை இல்லாமல் தீபாவளி பண்டிகையை ஏன் குறை கூற வேண்டும்? புத்தாண்டு என்று ஜனவரி மதம் எதற்கு பட்டாசு?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-நவ-201819:05:43 IST Report Abuse
Srinivasan Kannaiya போர்க்கால அடிப்படையில் முக்கால் வாசி அலுவலகங்களை முன்னூறு கிலோ மீட்டர் தாண்டி மாற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
08-நவ-201817:06:42 IST Report Abuse
Ram Judges who talk about air pollution by crackers should come by public transport to court, as their cars are polluting air daily. Their cumulative effect over the year is much bigger compared to the pollution due to crackers.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X