ஜெயலலிதா இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ஜெயக்குமார் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ஜெயக்குமார்

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (140)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நடிகர்கள், ஜெயலலிதா, அமைச்சர், ஜெயக்குமார், சர்க்கார்

சென்னை: ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


சென்னையில் இன்று( நவ.,8) அவர் அளித்த பேட்டி:உதவியாளர் மறைவு தாங்க முடியாத துயரம். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். தமிழுக்கு வீரம் முக்கியம் என எடுத்துரைத்த வீரமாமுனிவர் பிறந்தநாளை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது. கோழைகள் போல இப்போது செயல்படுகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சட்ட அமைச்சர் சண்முகம் சொன்னது போல, சர்க்கார் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர்., படங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தியது. இல்லை. நடிகர் விஜய் தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆராக முடியாது.உங்களை முன்னிலைபடுத்தி கொள்ளுங்கள். அதற்காக யாரையும் புண்படுத்த கூடாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.



ஆலோசனை

இதனிடையே, சென்னையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சர்கார் பட விவகாரம் தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.


போராட்டம்

இதனிடையே, சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிமா தியேட்டரை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Htanirdab S K - Hyderabad,இந்தியா
12-நவ-201812:20:14 IST Report Abuse
Htanirdab S K ஜோசப் விஜய், கோமாளி காசன், கஜினிகாந்த், சைமன், டேனியல் காந்தி, குருமா முதல் சைக்கோ உட்பட சுடலை வரை அனைவருக்கும் அம்மா இல்லாததால் துளிர் விட்டது உண்மை தான் ..
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
09-நவ-201807:18:51 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தமிழகத்தை, திரைப்படத்துறையில் உள்ள சிலர் கேவலப்படுத்துகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
09-நவ-201800:45:04 IST Report Abuse
Indhiyan கரெக்ட்டா சொன்னீங்க அமைச்சரே. ஜெ இல்லாமல் எல்லாருக்கும் குளிர் விட்டு போச்சு. அமைச்சர்கள் எல்லாம் நிமிர்ந்து நடக்கிறாங்க. குனிஞ்சு கும்பிட ஆள் இல்லே.
Rate this:
Share this comment
hasan - Chennai,இந்தியா
12-நவ-201819:25:52 IST Report Abuse
hasanசரியாக சொன்னீர்கள். அம்மா ஹெலிகாப்டரில் போகும் போது வேஸ்டி காற்றில் பறந்தது கூட தெரியாமல் இருந்தவங்கள் எல்லாம் இப்போது பேசுகிறார்கள். தன்னை நினைத்துப் பார்த்து பேச வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X