IMPACT OF DEMONETISATION | ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி விளக்கம்

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (75)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Arun Jaitley,BJP,அருண் ஜெட்லி,பா.ஜ,IMPACT,F DEMONETISATION

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்தவே கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும், இதனால், ஏற்பட்ட பலன்கள் குறித்தும் விளக்கமளித்து உள்ளார்.


கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற்று கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.



அரசின் நடவடிக்கை

இந்த திட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டு நிறைவு பெறுகிறது. பொருளாதாரத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளில் இது முக்கியமானதாகும். வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்களை குறிவைத்து அரசு முதலில் நடவடிக்கைகள் துவங்கின. அந்த பணத்தை இங்கு கொண்டு வந்து உரிய அபராதத்தை செலுத்த அறிவுரை வழங்கப்பட்டது. அதனை செய்யாதவர்கள் மீது கறுப்பு பணச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டன. வெளிநாட்டில் கறுப்பு பணம் மற்றும் சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைத்ததை வைத்து நடவடிக்கைகள் தொடர்ந்தன.


வரி ஏய்ப்பு கடினம்

வரி முறையை விரிவுபடுத்தவும், நேரடி மற்றும் மறைமுக வரியை செலுத்துவதை எளிமைபடுத்தவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஏழை மக்களுக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில், பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜன்தன் கணக்குகள் மூலம், ஏராளமான மக்கள் வங்கி சேவையுடன் இணைக்கப்பட்டார்கள். அரசின் மானியம், பயனாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வந்து சேரும் வகையில், ஆதார் சட்டம் அறிமுகபடுத்தப்பட்டது. வரி மற்றும் மறைமுக வரி நடைமுறைகளை ஜிஎஸ்டி மேலும் எளிமைப்படுத்தியது. தற்போதைய முறையில், வரி ஏய்பபு செய்வது கடுமையாகியுள்ளது.


நடவடிக்கை

ரொக்கம் பயன்பாடு அதிகமுள்ள பொருளாதாரத்தை கொண்டது நம் நாடு. இந்த பரிமாற்றத்தில், பணம் குறித்த கணக்குகள் யாருக்கும் தெரியாது. வங்கி முறையை தாண்டி, வரி ஏய்ப்பு செய்யவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், பணத்தை வங்கியில் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இதன் மூலம், முறையற்ற வகையில் கிடைத்த பணத்தை டெபாசிட் செய்யப்பட்ட 17.42 லட்சம் வங்கிக்கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. விதிகளை மீறியவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். அதிகளவு பணம் வந்ததால், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரித்தது. ஏராளமான பணம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்டது.


முக்கிய நோக்கம்

அனைத்து பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்ய வைக்கப்பட்டதாக தவறாக குற்றம் சுமத்தப்படுகிறது. பணத்தை பறிமுதல் செய்வது மட்டும் ரூபாய் நோட்டு வாபசின் நோக்கமல்ல. முறையான பொருளாதாரத்திற்குள் மக்களை கொண்டு வருவதும், வரி செலுத்த வைப்பதுமே முக்கிய காரணம். ரொக்கத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.இதனால், வருமானம் அதிகரிக்கும். வரி அமைப்பு பெரிதாகும்.


டிஜிட்டல் மயத்தின் பலன்

இரண்டு வங்கிக்கணக்குகளுக்கு இடையே மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய கடந்த 2016 ல் யுபிஐ(Unified Payment Interface) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த 2016 அக்டோபரில் 50 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த பணப்பரிமாற்றம், இந்த ஆண்டு( 2018) செப்டம்பர் மாதத்தில் 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 'பிம்' ஆப்பை தற்போது 1.25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசுக்கு முன்னர் ரூபே கார்டு மூலம், ரூ. 800 கோடிக்கு இருந்த பணப்பரிமாற்றம், இந்த ஆண்டு(2018) செப்டம்பரில் ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது.தற்போது, இந்தியாவில் யுபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பயன்பாடு காரணமாக விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் சந்தை மதிப்பு வீழ்ந்து வருகிறது.


நேரடி வரிகள் மீதான பலன்கள்

ரூபாய் நோட்டு வாபஸ் மூலம், வரி வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டை காட்டிலும், இந்த நிதியாண்டு(2018- 19) ல் 20.2 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது. கார்பரேட் வரியும் 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபசிற்கு முந்தைய இரண்டு ஆண்டில் வரி வசூல் முறையே, 6.6 சதவீதம், 9 சதவீதம் அதிகரித்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு பின் வரி வசூல் 14.6 சதவீதம், 18 சதவீதம் அதிகரித்தது. 2017 - 18 நிதியாண்டில், கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 6.86 கோடியாக அதிகரித்தது. இந்த ஆண்டு, 31.10.18 வரை 5.99 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், புதிதாக 86.35 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2014 மே மாதம் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது, 3.8 கோடி பேர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்தனர். அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 6.86 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.


மறைமுக வரியில் ஏற்பட்ட பலன்கள்

ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல் காரணமாக ரொக்க பரிமாற்றத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்தது. டிஜிட்டல் பரிமாற்றம் பயன்பாடு உயர்ந்தது. பொருட்கள் மற்றும் சேவை நுகர்வு அதிகரித்ததால், பொருளாதாரத்தில் மறைமுக வரி வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பயனடைந்துள்ளன. ஜிஎஸ்டிக்கு பின்னர் மாநில அரசுகளின் வரி வசூல் 14 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனால், வணிகர்கள் தங்களது வரவு செலவை தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மறைமுக வரியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், வருமான வரி செலுத்த வேண்டிய நிலையையும் ஏற்பட்டுள்ளது. 2014 - 15ல் ஜிடிபியில் மறைமுக வரி விகிதம் 4.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஒருசதவீதம் உயர்ந்து 5.4 சதவீதமாக உள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைக்கப்பட்டாலும், வரி வசூல் அதிகரித்துள்ளது.


மக்கள் பயன்


இந்த வருமானத்தை, சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கவும், சமூக திட்டங்களுக்கும், கிராமப்புற இந்தியாவுக்கும் மத்திய அரசு செலவு செய்கிறது. இதனை நாம், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தரமான சாலைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 8 கோடி பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.1.62 லட்சம் கோடி, மானிய உணவிற்காக செலவு செய்துள்ளோம். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. பயிர் காப்பீடு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. முத்ரா திட்டத்தின் மூலம் 13 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர். 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒன் ரேங்க் ஒன் பென்சன் அமல்படுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா
09-நவ-201800:36:07 IST Report Abuse
S.S.JAHUFER SADIK இவர் விளக்கியிருக்கும் காரணங்களை பண ஒழிப்பு இல்லாமலே நிறைவேற்றலாம். இத்திட்டத்தால் பலன் பெற்றது பணக்காரர்கள் பாதிப்படைந்தது பாமர மக்கள்.
Rate this:
Share this comment
R Anantha Padmanabhan - chennai,இந்தியா
09-நவ-201822:47:35 IST Report Abuse
R Anantha Padmanabhanஅமைச்சர் சொன்னதை புரிந்து கொள்ள வக்கில்லாத இந்த அரேபியாக்காரர், தான் ஒரு பெரிய பொருளாதாரவாதி என நினைத்துக் கொண்டு கருத்தை இட்டுள்ளார். G S T அதிகமாகச் செலுத்துவது பணக்காரனா, பாமரனா? பெரிய கரன்சி நோட்டுகள் ஒழிந்ததை நினைத்து கோடிகளில் பதுக்கி நஷ்டமடைந்த பணக்காரன் தான் இப்படி கருத்தைப் பகிர்வான். எந்த பாமரனும் பெரிய கரன்சிகளைப் பதுக்கி நஷ்டமடைந்திருக்கமாட்டான், ஏனெனில் அவன் ஏழை மற்றும் பாமரனாயிற்றே....
Rate this:
Share this comment
Htanirdab S K - Hyderabad,இந்தியா
12-நவ-201812:13:59 IST Report Abuse
Htanirdab S Kசார் சவுதிலயே நிறைவேத்துங்க போதும்.. இங்க நாங்க பாத்துக்கறோம்...
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
08-நவ-201822:13:36 IST Report Abuse
Ramakrishnan Natesan டெமோனிடைசஷன் பிறகு பெட்ரோல் விலை 50 ரூபாய் ஆகும் என்றார் புனியாவான் அன்று விலை 67 ருபாய் இன்று என்ன நிலை இது தான் பணமதிப்பீட்டின் உண்மை வெற்றி பாராட்டுவோம் வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Kadhar - Nagai,இந்தியா
09-நவ-201802:02:16 IST Report Abuse
Kadharஎன்ன நடேசா எந்த உலகில் இருக்கிறாய்? ஜெட்லியா பெட்ரோல் கம்பெனிகளின் owner? அரபியர்கள்தான் பெரும்பாலான பெட்ரோல் கம்பெனிகளின் முதலாளிகள். அவர்கள் உலக நிலவரப்படி உற்பத்தியும் விற்பனையும் செய்வார்கள். அதாவது, விலை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள், ஜெட்லி அல்லது மோடி இல்லை. உழைப்பினால் தான் நம் நாட்டு பணத்தின் மதிப்பு உயரும். இனம் வாங்கி திண்ணாமல், உழைத்து நாட்டுக்கு நல்லது செய், தானாக நம் நாட்டின் பணத்தின் மதிப்பும் உயரும் அதனால் பெட்ரோல் விலையம் குறைந்து காணப்படும்....
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
08-நவ-201821:32:40 IST Report Abuse
rsudarsan lic மாயாவதி லாலு முலாயம் ஆகியோரை கவிழ்க்க பண ப்புழக்கத்தை ஒழித்தார்கள். கொசுவைக்கொல்ல ஊரை கொளுத்தினா மாதிரி. ஏழைகளின் வருமானத்தில் விழுந்த ஓட்டை பற்றி இந்த மேதாவிக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியாது. நாடு இதே நிலையில் சூறையாடப்பட்டால் கொதித்து எழும். அப்போது வக்கீல் தொழிலுக்கு பொய் விடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X