அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நிருபர் வாக்குவாதம்| Dinamalar

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நிருபர் வாக்குவாதம்

Added : நவ 08, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அதிபர் , டிரம்ப், வாக்குவாதம்

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப்பிற்கும் சி.என்.என்., நிருபர் ஜிம் அகோஸ்டாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது சி.என்.என்., தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுமாறு செய்தியாளரிடம் கூறினார். இதன் பிறகும் அகோஸ்டோ தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், கேள்வி எழுப்பியது போதும்எனக்கூறி, அமருமாறு அகோஸ்டாவை வலியுறுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக்க மறுத்து டிரம்ப் நகர்ந்து சென்றார். பின்னர் திரும்பி வந்த டிரம்ப் அகோஸ்டாவை பார்த்து மக்களின் எதிரி என்று விமர்சித்தார்.


இதனை தொடர்ந்து அதிபரின் செய்தியாளர் சந்ததிப்புகளுக்கு அகோஸ்டாவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜிம் அகோஸ்டா தன்னை தடுக்க முயன்ற வெள்ளை மாளிகை பெண் ஊழியர் மீது கை வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.இதனை மறுத்துள்ள அகோஸ்டா, தன் கையிலிருந்து மைக்கை பறிக்க முயன்ற ஊழியரை தடுத்ததாக பதிலளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
09-நவ-201808:47:18 IST Report Abuse
tamil அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு அங்கே அதிபரையும் கேள்வி கேட்க முடியும், நமது நாட்டில் முடியுமா, சந்திக்கவே முடியாது, அப்படியிருக்க கேள்வி எங்கே கேட்பது, இது தான் நவீன இந்தியாவில் இன்றைய நிலை,
Rate this:
Share this comment
gopalakrishnan - tirupur,இந்தியா
09-நவ-201809:43:04 IST Report Abuse
gopalakrishnanஇங்க பிரதமரை கிண்டல் பண்ணி மீம்ஸ் போடா முடியும் அரேபியால போய் போட முடியுமா பாய்...
Rate this:
Share this comment
Cancel
rajan - erode,இந்தியா
09-நவ-201808:37:35 IST Report Abuse
rajan அமெரிக்காவில் அதிபரை எதிர்த்து பேசியவருக்கு தடை மட்டுமே. பிஜேபி ஆட்சியில் தேச துரோக வழக்கு,
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
09-நவ-201807:35:02 IST Report Abuse
Appan ஊடகங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எல்லா விதத்திலும் மட்டம் தட்டுவார்கள்.. இதை தான் 'சாப்ட் வார் 'என்பார்கள்..உதாரணத்திற்கு இப்போ நடந்த அமரிக்க தேர்தலில் ஊடகங்கள் டிரம்பை ஆதரிக்கவில்லை..எல்லா வழிகளிலும் மட்டம் தட்டினார்கள்..தேர்தல் முடிவுகளை டெமசரட்டிகளை பசசை நிறத்திலும் , ரிபப்லிக்கர்களை சிகப்பு நிறத்திலும் போட்டார்கள்..சிகப்பு நிறம் மனிதர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் நிறம்..அதோடு அந்த நிறத்தை பார்த்தாலே மக்கள் பயப்படுவார்கள்..இப்படி டிரம்பை படாத படுத்துகிறார்கள்..இதனால் இந்த தேர்தலில் ரிபப்ளிகன் தோல்வியை தழுவினார்கள்..செனெட்டில் மட்டும் தக்க வைத்து உள்ளார்கள்..கவர்னர்கள். அசெம்பெளியில் தோற்றார்கள்.இது தான் பேனா வாளை விட அதிகம் சக்தி வாய்ந்தத்து என்பார்கள்..பொருளாதாரத்தில் நோபல் பரிசு .பெற்ற ஒரு மேதை சொல்கிறார் அமெரிக்கா டிரம்பால் சரிவடைகிறது..இதை சரிக்கட்ட அவர்கள் 50 ஆண்டுகள் போராடவேண்டும் என்கிறார்..அமெரிக்காவின் டிரம்ப் பதவிக்கு வந்ததது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கணும் என்கிறார்..காழ்ப்பு உணர்ச்சி, , துவேசம்,, தான் என்ற அகந்தை,எல்லாம் எனக்குதான் .போன்ற சித்தாந்தங்களை போற்றினால் சமூகம் உடைந்து விடும்..இப்போ அமெரிக்கவில் அது தான் நடக்கிறது.. இந்தியாவும் பிஜேபியால் அந்த திசையை நோக்கி போகிறது..மக்கள் விழிப்பு பெற வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X