தேடப்படும் குற்றவாளியாக நிரவ் மோடி| Dinamalar

தேடப்படும் குற்றவாளியாக நிரவ் மோடி

Added : நவ 08, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குற்றவாளி,நிரவ் மோடி,நிரவ்

ஆமதாபாத் : வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியை, தேடப்படும் குற்றவாளியாக, குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல வைர வியாபாரியான, நிரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் துணையுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.

சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக, நிரவ் மோடி மீது, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, நிரவ் மோடிக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கு இன்று(நவ.,8) விசாரணைக்கு வந்த போது ஆஜராகாததால், நிரவ் மோடியை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதன் மூலம், இனி, எந்த வழக்கிலும், நிரவ் மோடி முன்ஜாமின் கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
09-நவ-201811:58:37 IST Report Abuse
pattikkaattaan ரேஷன் கார்டை முதலில் முடக்குங்கள், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தானாக வந்து சரணடைந்து விடுவான்
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
09-நவ-201811:29:47 IST Report Abuse
Darmavan இந்த மாதிரி எந்த ஆதாரமுமில்லாமல் கடன் கொடுத்தவனை பழிக்காமல் மோடியை குற்றம் சொல்லும் தேச துரோகிகள் நாட்டின் எதிரிகள். லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் கொடுத்த வாங்கி அதிகாரிகள்தான் ரகசியத்தை வெளியிட்டு அவர்கள் ஓடிப்போக உதவியவர்கள். மோடி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-நவ-201811:05:35 IST Report Abuse
ஆரூர் ரங் மோசடிப் பேர்வழிகளை வங்கியதிகாரி யாக்கியது காங் அரசு .இப்போ அவங்க துணையோடு ஆட்டயப்போட்டு தப்பிச்சா நரேந்திர மோடி பின்னாடி ஓடிப்போய் தேடணும். இதுவே காங் ஆட்சியா இருந்தா சோனியா ஆசியோட தைரியமா இங்கேயே இருந்திருப்பாங்க .1840000000000 நிலக்கரி ஊழலில் அஞ்சுபேர் தண்டனை பெற்று கம்பி எண்ணுறாங்க ஆனால் அப்போ நிலக்கரி மந்திரியாயிருந்து மவுனமா இருந்த மன்மோகன் வெளியில் தைரியமா சுத்தறாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X