இணைய தயாரிப்புகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சீனா உலகமயமாக மாறும்| Dinamalar

இணைய தயாரிப்புகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சீனா உலகமயமாக மாறும்

Updated : நவ 08, 2018 | Added : நவ 08, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இணைய தயாரிப்புகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் சீனா உலகமயமாக மாறும்

சீனாவின் ட்சே சியாங்மாநலத்தின் வூஜென் நகரில் நடைபெற்றுவரும் 5வது உலக இணைய மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று TAL கல்விக் குழுமத் தலைவர் பாய் யூன்ஃபெங், மொபைல் இணையத்தில் கவனம் செலுத்தி வரும் ஒரு தொழில்நுட்ப நிறுவனமான APUS இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாவோ மிங், மற்றும் ஸ்மார்ட் போன் உலகில் புகழ்பெற்ற ஹானர் நிறுவனத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் தொழில்நுட்ப அறிவு மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தொழில்நுட்பங்கள் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் என்னென்ன துறைகளில் சீனா முன்னேற்றம் அடைய உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த TAL கல்விக் குழுமத் தலைவர் பாய் யூன்ஃபெங், இணைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், மற்றும் இணைய தயாரிப்புகளின் பயன்பாட்டு ஆகிய இரண்டினாலும் சீனா ஒரு உலகமயமாக மாறும் மேலும், தொடர் முயற்சியின் காரணமாக பல்வேறு திருப்புமுனைகள் ஏற்படும்.தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் சார்ந்து இணைய அடிப்படையிலான புதிய வர்த்தகம் உருவாகும் என்று கூறினார்.

மேலும் அடிப்படையிலான IT அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம் கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டுவர முடியும். எதிர்காலத்தில், இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போன் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் போல் மூளை விஞ்ஞானத்தின் அடிப்படையில் அளவீட்டு கருவிகள் பிரபலமாகவும் வசதியாகவும் இருக்கும் என்றும் கூறினார்.

இந்த இணைய மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையத்தின் ஒளிக்கண்காட்சியில் தொழில்நுட்பம் மனிதர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன சின்ன விசயத்திலும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதை உணர்த்தும் விதமாக பல்பொருள் அங்காடியில் நாம் பொருட்களை வாங்க பயன்படுத்தும் கூடைகள் இப்போது ஒரு தானியங்கி கூடையாக நம்மோடு அதுவும் நடந்து வருவதை பார்க்க முடிந்தது.

இதுமட்டும் அல்லாமல் பேசும் ரோபோக்கள், ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து, எத்தனையோ வியப்பூட்டு விசயங்களை கண்காட்சியில் காண முடிந்தது. மேலும் கண்காட்சியை காணவந்திருக்கும் பார்வையாளர்களின் முகபாவனைகளை படம் பிடித்து சேமித்து வைக்கும் டிஜிட்டல் திரை ஒன்றும் வியப்பூட்டுவதாக இருந்தது. அதைவிட ஒரு ஆச்சரியமன அதிசியமான ஆனால் உணமையான ஒரு விசயம். உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி அறிவிப்பாளர் இந்த இணைய மாநாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது என்பதுதான். சமீபத்திய AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இயங்கும் இந்த இயந்தர செய்தி அறிவிப்பாளரின் குரல் மற்றும் முகபாவனைகளை பார்க்கும் போது உண்மையான செய்தி வாசிப்பாளர் போலவே இருக்கிறது.

AI தொழில்நுட்பத்தினால் இயங்கும் இந்த செய்தி வாசிப்பாளர் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா மற்றும் சீன தேடுபொறி நிறுவனமான Sogou.com ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்தி உற்பத்தி செலவுகளை குறைத்து, திறனை மேம்படுத்துவதோடு, பல சமூக ஊடக தளங்களில் 24 மணிநேரம் வேலை செய்ய முடியும் என்று சின்குவா தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
09-நவ-201808:43:11 IST Report Abuse
ரத்தினம் தொழில் நுட்ப வளர்ச்சியெல்லாம் நமக்கு பிடிக்காது. சீனாக்காரன் பண்ணினால் ஓகே. இங்கே எல்லாம் அதை செய்யக்கூடாது. ஆட்களை குறைத்தால் காம்ரேடுகள் எப்பிடி தொழில்சங்கம் வைக்க முடியும்? எப்படி வேலை நிறுத்தம் பண்ணி உண்டியல் குலுக்கி பிழைப்பு நடத்துவது? நியூட்ரினோ , சாலைகள், துறை முகங்கள், வேண்டாம். எரிவாயு, எண்ணெய் எடுக்கக்கூடாது, கால்வாய்கள் அணைகள் கட்டக்கூடாது. மோடி ஒழிக. இப்படிக்கு காம்ரேட், ஏமாற்று திராவிட மற்றும் தேச துரோக வந்தேறி கும்பல்கள் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201808:03:53 IST Report Abuse
Srinivasan Kannaiya இணைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், மற்றும் இணைய தயாரிப்புகளின் பயன்பாட்டு ஆகிய இரண்டினாலும் சீனா ஒரு உலகமயமாக மாறும் , இது அப்பட்டமான உண்மை...
Rate this:
Share this comment
Cancel
09-நவ-201807:38:47 IST Report Abuse
ஆப்பு வேலை ஒயுங்கா செய்யலேன்னா கரபான் பூச்சி சாப்புடறது போன்ற தணடனையெல்லாம் கூட உலக மயமாக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X