இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : நவ 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று


நவம்பர் 9, 2005

கே.ஆர்.நாராயணன்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், உழவூர் கிராமத்தில், 1920, அக்., 27ல் பிறந்தார். கோட்டயத்தில், கல்லுாரி கல்வியையும், கேரள பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்பையும் முடித்தார். இதழியல் படிப்பை முடித்த அவர், ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றினார். லண்டன் பொருளாதார கல்விக் கழகத்தில், அரசியல் அறிவியலில் மேல்படிப்பை முடித்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றியவர்.

முன்னாள் பிரதமர், இந்திரா வேண்டுகோளை ஏற்று, 1984ல், அரசியலுக்குள் வந்தார். கேரள மாநிலம், ஒற்றப்பாலம் லோக்சபா தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், திட்டம், வெளியுறவு, அறிவியல் தொழில்நுட்ப துறை இணையமைச்சராக பொறுப்பு வகித்தவர். 1992ல் நாட்டின் ஒன்பதா-வது, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997ல் ஜனாதிபதியானார். 2005, நவ., 9ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X