எழுத்தறிவு தேர்வில் சாதனை: பாட்டிக்கு, 'லேப் - டாப்' பரிசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எழுத்தறிவு தேர்வில் சாதனை: பாட்டிக்கு, 'லேப் - டாப்' பரிசு

Added : நவ 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Aksharalaksham , karthyayani amma,  Laptop Prize,எழுத்தறிவு தேர்வு, சாதனை பாட்டி, லேப்டாப் பரிசு, அக்ஷரலக்ஷம், கார்த்தியாயினி அம்மா,அமைச்சர் சி.ரவீந்திரநாத், கேரளா , கேரளா பாட்டி, 
Literacy exam, Aksharalaksham,  Minister C.Raveendranath, Kerala, Kerala Grandmother,Aksharalaksham literacy exam,

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில், எழுத்தறிவு இயக்கத் தேர்வில் சாதனை படைத்த, 96 வயது மூதாட்டிக்கு, மாநில கல்வித் துறை சார்பில், 'லேப் - டாப்' பரிசாக வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தில், இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக, 'அக்ஷரலக்ஷம்' எனும் பெயரில், எழுத்தறிவு இயக்கம் என்ற திட்டத்தை, கேரள மாநில அரசின், கல்வித் துறை நடத்தி வருகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து பயில்வோருக்கு, வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில், திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சமீபத்தில் நடந்த எழுத்தறிவு இறுதித் தேர்வில், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த, 96 வயது மூதாட்டி, கார்த்தியாயினி அம்மா, 100-க்கு, 98 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன்பின், கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள ஆர்வம் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார். கார்த்தியாயினி அம்மாவின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியை, முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

இந்நிலையில், எழுத்தறிவு இயக்கத் தேர்வில் முதலிடம் பிடித்த, கார்த்தியாயினி அம்மாவின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அவருக்கு, மாநில கல்வித் துறை சார்பில், தீபாவளி அன்று, 'லேப் - டாப்' பரிசாக வழங்கப்பட்டது. இதை, மாநில கல்வித் துறை அமைச்சர், சி.ரவீந்திரநாத் வழங்கினார்; 'லேப் - டாப்'பை இயக்குவது குறித்தும், மூதாட்டிக்கு, அமைச்சர் கற்றுக் கொடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X