செய்தி சில வரிகளில்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : நவ 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சுவாதி திருமஞ்சனம்

நரசிங்கபுரம்: கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது, லட்சுமி நரசிம்மர் கோவில். இங்கு, மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று, மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.இதையடுத்து, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சனமும், நடந்தது. இதனால், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, பெருமாளை வழிபட்டனர்.காலை, 5:30 மணிக்கு, கோ பூஜையும், தொடர்ந்து யாகபூஜையுடன் திருமஞ்சனமும் நடந்தது. அதன் பின், மாலை, நரசிம்ம ஜெயந்தி அவதார ஆராதனமும், தொடர்ந்து உற்சவர் நரசிம்ம பெருமாள் வீதியுலாவும் நடந்தது.இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி

கும்மிடிப்பூண்டி: சத்ய சாய் சேவை நிறுவனம் சார்பில், சென்னை, குரோம்பேட்டை அருகே, நன்மங்கலம் பகுதியில், இலவச தொழிற்பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், கிராமபுற இளைஞர்கள், தொழிற்பயிற்சி பெற வரவேற்கப்படுகின்றனர்.எட்டாம் வகுப்பு முடித்த, 16 -- 30 வயதுடைய இளைஞர்களுக்கு பிளம்பிங், எலக்ட்ரிக்கல், டூ -- வீலர் மெக்கானிக் ஆகிய மூன்று பிரிவுகளில், தனித்தனியே மூன்று மாத கால இலவச தொழிற்பயிற்சி அளிக்க உள்ளனர்.பயிற்சி காலத்தில் தங்கும் இடம், உணவும் இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, சத்ய சாய் சேவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தொழிற்பயிற்சி பெற விரும்புவோர், 99436 54712 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.நாகாலம்மனுக்கு கம்பு படையல்

ஆர்.கே.பேட்டை: நாகாலம்மன் சதுர்த்தியை ஒட்டி, கம்பு படையல் இன்று தயாராகிறது. வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதில், பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.தீபாவளிக்கு அடுத்த, ஐந்தாம் நாள், நாகாலம்மன் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நாளை மறுதினம், ஞாயிற்றுக்கிழமை, நாகாலம்மன் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு முளை விட்ட கம்பு மற்றும் வெல்லம் கலந்த எள் படைக்கப்படும்.இதற்காக, கம்பு தானியத்தை பெண்கள் இன்று முளைப்புக்கு வைக்க உள்ளனர். வரும், ஞாயிறு அன்று, ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நாகாலம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெறும்.இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, வங்கனுார், பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் நாகாலம்மன் வழிபாடு நடைபெறும்.இன்று மருத்துவ முகாம்

கவரைப்பேட்டை: கவரைப்பேட்டையில் இயங்கி வரும், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில், குருவராஜகண்டிகை கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், இன்று, காலை, 8:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை, இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.ஸ்ரீசத்ய சாய் நடமாடும் மருத்துவமனை குழுவினர் பங்கேற்கும் முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.புதிதாக மருத்துவ முகாமில் சிகிச்சை பெற வருபவர்கள், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டையை கொண்டு வர வேண்டும் என, ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X