பெட்ரோல் விற்பனை பொது கருத்து கேட்க முடிவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பெட்ரோல் விற்பனை
பொது கருத்து கேட்க முடிவு

புதுடில்லி : பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிம விதிகளை தளர்த்துவது குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

petrol,பெட்ரோல்,விற்பனை,பொது கருத்து,முடிவு



பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை, பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்., இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் வைப்பதே சட்டமாக உள்ளது.

தனியார் துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி, ராயல் டச் ஷெல் ஆகிய நிறுவனங்களிடம் மிகக் குறைவாகவே, பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.


எனவே, பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில், அதிக அளவில் தனியார் நிறுவனங்களை ஈர்த்து, சந்தையில் போட்டியை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நுகர்வோர் பெரிதும் பயனடைவர் என்பதால், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிமம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட உள்ளன.


இது குறித்து ஆராய, பொருளாதார வல்லுனர், கிரித் பரிக், எண்ணெய் துறை முன்னாள் செயலர், ஜி.சி. சதுர்வேதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பான கருத்துகளை, பொதுமக்கள் இரு வாரங்களுக்குள் தெரிவிக்கலாம் என, பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இக்கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை, உயர்மட்டக் குழு, 60 நாட்களில், மத்திய அரசுக்கு வழங்கும்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-நவ-201821:37:33 IST Report Abuse

Natarajan Ramanathanமுதலில் தினசரி விலை நிர்ணயம் என்ற முறையை மாற்றி மாதம் ஒருமுறை, அதுவும் பைசா இல்லாமல் முழு ரூபாயாக மட்டுமே விலை வைக்க வேண்டும்.

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
09-நவ-201821:32:43 IST Report Abuse

J.Isaacகருத்து கணிப்பா? இதுவரைக்கும் தேர்தலுத்தானே ஊடகங்கள் மூலம் நடத்தினார்கள் . திடீர் என்று ஏன் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது என்று புரியவில்லை ரிலையன்ஸூக்கு உதவி பண்ண இவ்வளவு நாள் மக்களை ஏமாற்றியிருக்கிறார்களே. மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-நவ-201820:33:38 IST Report Abuse

Pugazh Vதனியார் பஸ்களால் நடக்கும் அராஜகங்களால் கட்டணங்கள் விமான டிக்கெட் டை விட அதிகமாக ஆனதை பார்க்கிறோம். எல்லா தனியார் விமான நிறுவனங்களும் நஷ்டத்தில் ஓடுவதை பார்க்கிறோம். எல்லா தனியார் ஆன்லைன் வியாபார கம்பெனி களும் நஷ்ட த்தில் என்பதையும் பார்க்கிறோம். அவர்கள் 70% போலிகளை நம் தலையில் கட்டுவதையும் பார்க்கிறோம். இனி தனியார் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போட சொல்லி அரசு பங்க்குகளை காலியாக்கி அவற்றை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விடுவார்கள். இது நடந்ததும் .. அவர்கள் நினைத்தது தான் விலை அவர்கள் வைத்தது தான் சட்டம். இதையும் வரவேற்க சில ஆசாமிகள் இருப்பார்கள்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X