அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,வை 'ராங் நம்பர்' என கலாய்த்த மக்கள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,வை
'ராங் நம்பர்' என கலாய்த்த மக்கள்


கரூர் : கரூர் அருகே, மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கீதாவை, 'ராங் நம்பர்' என்று கலாய்த்த தொகுதி மக்களை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சமாளித்தார்.

அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,ராங் நம்பர்,கலாய்த்த,மக்கள்



துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, சட்டசபை தொகுதிகளில், பொதுமக்களிடம் மனு பெற்று வருகிறார். இவர், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற, பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, கிருஷ்ணராயபுரம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கீதா, தொகுதி பக்கமே எட்டி பார்க்காததால்,

தம்பிதுரை அந்த தொகுதிக்கு செல்லும் போது, பொதுமக்கள் எதிர்ப்பால் திணறி வருகிறார்.


இந்நிலையில், நேற்று கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், பொதுமக்களிடம் மனுக்களை பெற, தம்பிதுரையுடன், எம்.எல்.ஏ., கீதா மற்றும் அதிகாரிகள் சென்றனர். செல்லாண்டிபுரத்தில் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது, பாலப்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவர், 'எங்கள் கிராமத்தையே, எம்.எல்.ஏ.,வுக்கு தெரியாது. 'அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டால், 'ராங் நம்பர்' என்று சொல்லி வைத்து விடுகிறார்' என, புகார் தெரிவித்தார்.


உடனே, கீதா, 'அப்படிஎல்லாம் இல்லை' என்று பேச துவங்கியுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.எல்.ஏ.,வை, 'ராங் நம்பர்' என கோரசாக கூறி கலாய்த்தனர்.

Advertisement




அப்போது, துணை சபாநாயகர் தம்பிதுரை, ' அவர் ஐந்து ஆண்டு, மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். அவருக்கு அனைத்து கிராமங்களும் தெரியும்' என்று கூறி, வேறு விஷயத்திற்கு தாவினார். பின், அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண், எம்.எல்.ஏ.,வை, தம்பித்துரை அங்கிருந்து வேகமாக அழைத்து சென்றார்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-நவ-201820:53:38 IST Report Abuse

Nallavan Nallavanடுமீலர்கள் காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போடும்போது நல்லா இருந்துச்சாம் ........

Rate this:
வெட்டி பிஜேபி வெறுப்போர் சங்கம் - பெயர் மாற்றும் திறமைசாலிகள் ஊர்,இந்தியா
12-நவ-201808:22:06 IST Report Abuse

வெட்டி பிஜேபி  வெறுப்போர் சங்கம்(தயிர்)"வடை" நாட்டவர்கள் வெறிக்கு வோட்டு போடும்போது டுமீலர்கள் காசு வாங்கி வோட்டு போடுவது நன்றாக தான் இருக்கும்....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-நவ-201817:23:26 IST Report Abuse

இந்தியன் kumar, திமுக சட்ட மன்ற தேர்தலில் கொடுத்தினால் தான் இவ்வளவு தொகுதிகள் வெற்றி பெற்றது , காசு கொடுக்காமல் ஒரு வேட்பாளரும் வெற்றி பெற வில்லை இது தான் உண்மை. .

Rate this:
வெட்டி பிஜேபி வெறுப்போர் சங்கம் - பெயர் மாற்றும் திறமைசாலிகள் ஊர்,இந்தியா
12-நவ-201808:23:02 IST Report Abuse

வெட்டி பிஜேபி  வெறுப்போர் சங்கம்ஊழல்வாதிகளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் கொடி பிடிக்கும் உன்னை போன்றோருக்கு இதை சொல்ல துளியும் அருகதை இல்லை....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-நவ-201817:20:11 IST Report Abuse

இந்தியன் kumarகாசு வாங்கி வோட்டு போட்டவன் கேள்வி கேட்க உரிமை கிடையாது , இனிமேலாவது காசு வாங்காமல் நால்லவர் யார் என்று பார்த்து வாக்களியுங்கள் இல்லை என்றால் நோட்டா

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-நவ-201811:18:26 IST Report Abuse

Manianதம்பி, நியாயம்தான். ஆனா, 70 - 80 % கிராமத்து ஆளுக ஓட்டை விக்குறானுக (சென்னை தினகரன் டோக்கன் வேலை இன்னொரு பக்கம் )- அவுனுக தினமரிலே நானோ, நியோ எழுத்துறை படிப்பானுகளா? திருந்துவானுக்களா ? அதை எப்படி செய்யறதுன்னு வழி சொல்லு தம்பி....

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X