தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் எதிரொலி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் எதிரொலி

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் எதிரொலி

புதுச்சேரி:ஒரு வாரத்தில் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்ததால், புதுச்சேரி செயற்கை மணற்பரப்பு பகுதியில், கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் தலைமை செயலகம் அருகே செயற்கை மணற்பரப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அங்கு, கடற்கரையில் நீண்ட துாரம் மணற்பரப்பு உருவாகியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரை மணற்பரப்பில் குவிந்து, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.ஆனால், சுற்றுலா பயணிகளின் சிலர் கடலில் இறங்கி குளிப்பதால், கடந்த ஒரு வாரத்தில், பல்வேறு பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.சமீபத்தில் நடந்த உயிரிழப்பு சம்பவங்களை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடல் மணற்பரப்பில் கூட இறங்குவற்கு கூட தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மணற்பரப்பு பகுதியில், கடலோர மீட்பு குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர், கடற்கரையில் இறங்கும் சுற்றுலா பயணி களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X