பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்: ஸ்டாலின்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்: ஸ்டாலின்

சென்னை:'நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு தனி மனிதரால், நிகழ்த்தப்பட்ட பேரிடர்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:நாட்டு மக்கள் அனைவரையும், நடுத் தெருவுக்கு தள்ளிய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின், இரண்டாம் ஆண்டு இன்று. வங்கிகளில், முடிவே இல்லாத நீண்ட வரிசையில், மக்களை நிற்க வைத்து, அலைக்கழித்ததுடன், வங்கி வாசலில், அப்பாவி மக்கள் பலர், தங்கள் உயிரை இழந்த கொடுமையை, இந்த நாடு மறக்காது.
அதுமட்டுமல்ல; லட்சக்கணக்கில், வேலை வாய்ப்பு பறிபோனதுடன், சிறு, குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி தள்ளப்பட்டது.நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
09-நவ-201820:35:42 IST Report Abuse
r.sundaram இது பேரிடர் என்றால் சரி, அப்போ சர்க்காரியா கமிசன் என்னது? உங்களைப் பார்த்தால் நீங்கள் மாட்டிகிக்கொண்ட மாதிரி தெரிய வில்லையே, வேண்டுமானால் சூரிய சகோதரர்கள் மாட்டிக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்களும் வெளிக்காட்டிக் கொள்ள வில்லையே. காங்கிரெஸ்க்காரன்தான் வாயிலும் வயித்திலும் அடிச்சிக்கிறான் என்றால் உங்களுக்கென்ன வந்தது.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
09-நவ-201822:13:39 IST Report Abuse
uthappaஇவைங்களுக்கே ரூ.38000 கோடி அம்பேல் ஆன தினமாம் அன்று....
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-நவ-201823:25:01 IST Report Abuse
Matt Pசர்க்காரியா கமிஸ்ஸான >..ஸ்டாலினுக்கு அப்படினா என்நவென்றே தெரியாது. கேள்விப்பட்டதே இல்லை ...சர்க்காரியா ...விசாரணை நடக்கும்போது வீட்டு முன்னால் கோலி,கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்திருப்பார். அப்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் எல்லாம் இருந்திருக்காது இவருக்கு.....
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
09-நவ-201818:02:43 IST Report Abuse
Bhagat Singh Dasan உழைத்த காசை வங்கியில் கஷ்டப்பட்டாவது மாத்தினவன் எல்லாம் அதை மறந்துட்டான். ஆனால், அதனால் பாதிப்படைந்த அரசியல் மொடா முழுங்கிகள் அதை ஜீரணிக்க முடியாமல், திருடனுக்கு தேள் கொட்டியது போல புலம்புகிறார்கள்.
Rate this:
Share this comment
R Anantha Padmanabhan - chennai,இந்தியா
09-நவ-201820:55:13 IST Report Abuse
R Anantha Padmanabhanநானும் கமெண்ட்டெல்லாம் படித்தேன். ஒருவராவது தலைவன் சொன்னதை ஆதரித்து கமெண்ட் போட்வில்லையே இது அந்தக் கட்சிக்கு அழிவுகாலம் வந்துவிட்டதற்கான அறிகுறியேதான் என்று தோன்றுகிறது....
Rate this:
Share this comment
Cancel
HSR - Chennai,இந்தியா
09-நவ-201816:43:14 IST Report Abuse
HSR பாருங்க மக்களே வாரிசு அரசியல் கூட்டம் எல்லாம் தானாவே ஒண்ணு சேருது. குடும்பம் குடும்பமாக எப்படி மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது கொள்ளையடிப்பது போன்ற தந்திரங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கருத்தொருமித்த முடிவுகளை எடுக்க இருதரப்பிலும் மாறி மாறி யோசனைகள் கூறப்படும்.. மேலும் இதுபற்றி இரு பெரும் தலைவர்களும் கூட்டாக எப்படி வெளியில் தெரியாமல் கொள்ளையடிப்பது போன்ற இரகசிய ஆலோசனைகளும் பரிமாறிக்கொள்ளுவார்கள். இதையெல்லாம் பார்த்தும் நமது முட்டாள் ஜனங்கள் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஆவலாக காத்திருப்பது இவர்களின் நீண்ட கால உறவுக்கு மேலும் வலு சேக்கின்றது..இதையெல்லாம் பார்க்கும்போது நாமும் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து சட்ட நுணுக்கங்களை அறிந்து சட்டப்படி கடத்தல் கொலை பல ஆக்கிரமிப்பு போன்றவற்றை செய்யலாமா என்ற கேள்வி நம் மனதில் எழாமல் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X