பலி, தற்கொலை, கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலி, தற்கொலை, கொலை

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பலி, தற்கொலை, கொலை

மாணவன் உடல் கரை ஒதுங்கியது
திருப்பூர், காந்தி நகரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் கண்ணன். மனைவி மலர்விழி, மகன்கள் ஆனந்தன், 17, மோகன், 15, ஆகியோருடன், நேற்று முன்தினம் மாலை, ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள, கொடிவேரி தடுப்பணைக்கு சென்றனர். தடுப்பணைக்கு கீழே, பவானி ஆற்றில் குளித்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக, ஆனந்தன் தண்ணீரில் மூழ்கினார். கண் எதிரே மகன் மூழ்கியதால், பெற்றோர் பதறினர். அப்பகுதி மீனவர்கள் தேடியும் சடலம் கிடைக்கவில்லை. இந்நிலையில், பவானி ஆற்றங்கரையோரம், நேற்று காலை, ஆனந்தன் உடல் கரை ஒதுங்கியது. பங்களாப்புதுார் போலீசார், உடலை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.
குமரியில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை
குமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்தவர், ஜெட் வினோராஜ்,36; கூலி தொழிலாளி. இவரது மனைவி, பிரிந்து சென்றதால், மனமுடைந்து குடி பழக்கத்துக்கு அடிமையான இவர், நேற்று முன் தினம், வீட்டின் அருகிலுள்ள புளிய மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த கீழமறவன்குடியிருப்பை சேர்ந்த கண்ணன், 50, நேற்று முன் தினம் அதிகளவில் மது குடித்து, வீட்டில் படுத்து துாங்கினார்.நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், உறவினர்கள் அவரை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் உயிர்இழந்ததாக தெரிவித்தனர்.
இதேபோன்று வீட்டை அடமானம் வைத்து, திருப்ப முடியாத சோகத்தில் இருந்த திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த சஜின் ராஜ், 31, துாக்கு போட்டும், குடும்ப கோவிலில் தீச்சட்டி எடுக்கும் போது தீக்காயம் ஏற்பட்டதில் வருத்தம் அடைந்த பறக்கை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 25, விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து, தக்கலை, கோட்டார், கருங்கல் மற்றும் சுசீந்திரம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதல் தகராறு: நர்ஸ் கடத்தி கொலை
வேலுார் அடுத்த, கீழ்மொணவூரைச் சேர்ந்தவர் கதிரேசன், 35; ஆட்டோ டிரைவர். இவர் மனைவி அனிதா, 28; வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். தீபாவளியன்று வேலைக்கு சென்ற அனிதா, வீடு திரும்பவில்லை.கதிரேசன் கொடுத்த புகார்படி, வேலுார் வடக்கு போலீசார் அவரை தேடி வந்தனர் நேற்று முன் தினம், வேலுார் அருகே, சதுப்பேரி ஏரியில், அனிதா பிணமாக மிதந்தார்.'
அனிதாவின் சாவில் மர்மம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் அஜித்குமார், 40, கடத்தி கொலை செய்திருக்கலாம்' என, வேலுார் வடக்கு போலீசில், நேற்று கதிரேசன் புகாரளித்தார். இதையடுத்து, சந்தேக மரண வழக்காக மாற்றி, போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:அனிதாவுக்கும், அஜித்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை, கணவர் கண்டித்தும், கள்ளக்காதலை அனிதா தொடர்ந்துள்ளார்.
தீபாவளியன்று, வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற அனிதா, அஜித்குமாரை சந்தித்து, கள்ளத் காதலை கைவிடும்படி தெரிவித்துள்ளார்.ஆத்திரமடைந்த அஜித்குமார்,அவரை கடத்தி, அடித்துக் கொன்று உடலை, சதுப்பேரி ஏரியில் வீசியுள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தலைமறைவான அஜித்குமாரை கைது செய்தால், முழு விபரமும் தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X