ரூ.40 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தல்: நாமக்கல்லில் இரண்டு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.40 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தல்: நாமக்கல்லில் இரண்டு பேர் கைது

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ரூ.40 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தல்: நாமக்கல்லில் இரண்டு பேர் கைது

நாமக்கல்:நாமக்கல் அருகே, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயம் கடத்தி வந்த இருவரை, போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று காலை, 6:00 மணிக்கு, சேலம் - - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த டாரஸ் லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 500-க்கும் மேற்பட்ட கேன்களில், 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த, திருவள்ளுர் மாவட்டம், திருவொற்றியூரை சேர்ந்த கமலக்கண்ணன், 35, ஆந்திர மாநிலம், சித்துார், கோவிந்தரெட்டிபள்ளியை சேர்ந்த சிவய்யா, 30, ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதில், அவர்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள, பாலாஜி கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து, 'லிக்விட் குளோரின்' என்ற பெயரில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு, எரிசாராயம் கடத்தி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் ஸ்பிரிட் கேன்கள் கைப்பற்றப்பட்டன. லாரி மற்றும் எரிசாராயத்தின் மொத்த மதிப்பு, 40 லட்சம் ரூபாய். மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X