'சர்ச்சை காட்சிகளை நீக்காவிட்டால் உயிரை கொடுத்து தடுப்போம்' *அமைச்சர் உதயகுமார் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சர்ச்சை காட்சிகளை நீக்காவிட்டால் உயிரை கொடுத்து தடுப்போம்' *அமைச்சர் உதயகுமார் ஆவேசம்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருமங்கலம்:''சர்கார் திரைப்படத்தில்சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், ஜெ., பேரவை தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது தடுத்து, ஜெ.,யின் பெருமையை நிலை நாட்டுவர்,'' என, வருவாய்த் துறை அமைச்சர், உதயகுமார் கூறினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்ற பின், நிருபர் களிடம் உதயகுமார் கூறியதாவது:வணிக நோக்கத்திற்காக சர்கார் திரைப்படத்தில், ஜெ., உழைப்பையும், திட்டங்களையும் கொச்சைப்படுத்தும் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கருணாநிதியை பற்றியகாட்சிகளை, அந்த படத்தின் தயாரிப்பாளர் சேர்க்கவில்லை. இதனால் தயாரிப்பாளரும், படத்தின் இயக்குனரும் திட்டமிட்டே இந்த செயலை செய்துள்ளனர்.
திருட்டு கதை மூலம், படத்தின் இயக்குனர் செய்துள்ள இந்த செயல், தமிழர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. ஜெ., புகழுக்கும், திட்டங்களுக்கும் பங்கம் ஏற்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால், ஜெ., பேரவை தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது ஜெ., புகழை நிலை நாட்டுவர்.இவ்வாறு கூறினார்.
'தினமலர்' நாளிதழுக்கு பாராட்டு
ஜெ., பேரவை நிர்வாகி களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:மக்களுக்காக, ஜெ., அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. நேற்று, 'தினமலர்' இதழில், 'விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள்' குறித்து விரிவான செய்தி வெளியாகி இருந்தது. 'தினமலர்' போன்ற நாளிதழ்களை படித்து, அரசின் திட்டங்களை தெரிந்து மக்களிடம் சேர்க்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
09-நவ-201813:02:47 IST Report Abuse
Matt P ஜெ., பேரவை தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது........ஒரு அமைச்சரே தற்கொலையை தூண்டுவது மாதிரி பேசலாமா? ..அதுவும் திரை வசனத்துக்காக ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X