பருவமழை நீடித்தால் உப்புக்கு தட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை நீடித்தால் உப்புக்கு தட்டுப்பாடு

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பருவமழை நீடித்தால்  உப்புக்கு தட்டுப்பாடு

ராமநாதபுரம்:தமிழகத்தில் பருவ மழைகளால் உப்பு உற்பத்தி, 60 சதவீதமாக குறைந்தது. தொடர்ந்து மழை நீடித்தால், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் உப்புகள் ரக வாரியாக சமையல், தொழிற்சாலை களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.உப்பு உற்பத்தி பிப்., முதல் ஆக., மாதம் வரை இருக்கும். இந்தாண்டு தென் மேற்கு பருவமழையால், மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. வட கிழக்கு பருவமழையும் தற்போது துவங்கி உள்ளது. சாதாரணமாக தமிழகத்தில் ஆண்டுக்கு, 25 லட்சம் டன் உற்பத்தி இருக்கும்.
இந்தாண்டு மழையால், 60 சதவீதமாக குறைந்து, 15 லட்சம் டன், மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X