மேட்டூர் தனியார் ஸ்கேன் மையத்துக்கு சீல்: சுகாதாரத்துறை மாஜி இணை இயக்குனர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் தனியார் ஸ்கேன் மையத்துக்கு சீல்: சுகாதாரத்துறை மாஜி இணை இயக்குனர் கைது

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: மேட்டூரில், தனியார் ஸ்கேன் மையத்துக்கு, 'சீல்' வைத்த கண்காணிப்பு குழுவினர், அதை நடத்திய சுகாதாரத்துறை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் டாக்டர் சந்திராவை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அம்மா உணவகம் எதிர்புறம், மின்வாரிய மத்திய அலுவலகம் செல்லும் சாலையில், ஸ்ரீவேலவன் ஸ்கேன் மையம் உள்ளது. இதை மேட்டூரை சேர்ந்த, ஓய்வு பெற்ற மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சேலம் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் சந்திரா நடத்தி வருகிறார். இந்த மையத்தில், கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என, ஸ்கேன் செய்து கூறுவதாகவும், கருக்கலைப்பு செய்வதாகவும், சுகாதாரத்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. நேற்று மதியம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலின தேர்வு தடை செய்யும் மருத்துவ குழுவினர், ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குழு கண்காணிப்பாளர் கமலகண்ணன், டி.எஸ்.பி., தாமஸ் பிரபாகரன், நுண்கதிர் மருத்துவர் நடராஜன், சேலம் இணை இயக்குனர் சத்யா ஆகியோர், டாக்டர் சந்திராவிடம், மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். ஆய்வின்போது, கருக்கலைப்புக்கான மருந்து, மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த குழுவினர், ஸ்கேன் எடுப்பதற்கு உரிய ஆவணங்களை பராமரிக்காத டாக்டர் சந்திரா மீது, மேட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், நேற்று சந்திராவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X